full screen background image

‘செங்கேணி’ திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!

‘செங்கேணி’ திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!

ஜி.ஜி. பிலிம் கிரியேஷன் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘செங்கேணி’ திரைப்படம் இன்று துவங்கியது.

இந்தப் படத்தை கதை, திரைக்கதை, எழுதி, இயக்குகிறார் இயக்குநர் கோபாலகிருஷ்ணன் கோபிநாத், இவர் தமிழில் பல முன்னணி இயக்குநர்களிடம் பணிபுரிந்தவர். 

மேலும் பிரபல இசையமைப்பாளர் N.R.ரகுநந்தன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

பாடல் வரிகளை கவிஞர் யுகபாரதி எழுதுகிறார்.  ஒளிப்பதிவினை சின்ராஜ் ராம் மேற்கொள்கிறார்.

B.சேகர் அவர்கள் கலை இயக்குநராகப் பணி செய்ய இருக்கிறார். இவர் ‘கோட்டை’, ‘சர்தார் 2’ & ‘அமரன்’ ஆகிய படங்களின் கலை இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

வசனத்தினை திருப்பதி ராஜா கோவிந்தராஜ் எழுதுகிறார்.

ஆடை வடிவமைப்பு பணிகளை மரியா மிலன் செய்கிறார்.

மேலும் பல முன்னணி நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் இந்தப் படத்தில் பங்கு பெற இருக்கிறார்கள்.

இது குறித்த அறிவிப்பு எதிர்வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று படக் குழு அறிவித்துள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும், நவம்பர் மாத இறுதியில் துவங்க இருக்கிறது,

Our Score