வருகின்ற டிசம்பர் 30-ம் தேதி வெளியாக இருக்கும் ‘தரமணி’ திரைப்படத்தின் பாடல்கள் மூலம், 2016-ம் ஆண்டு காதலுடன் நிறைவு பெற இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டின் இறுதி நாட்களையும் மகிழ்ச்சி கலந்த அன்புடன் நிறைவு செய்தால்தான், உதயமாகின்ற ஆண்டும் சிறப்பாக இருக்கும். அப்படி ஒரு உணர்ச்சிகரமான இன்பத்தை வருகின்ற டிசம்பர் 30-ம் தேதி ரசிகர்களுக்கு வழங்க இருக்கிறது, யுவன்ஷங்கர் ராஜாவின் மனதை மயக்கும் இசையில் உருவாகி இருக்கும் ‘தரமணி’ படத்தின் பாடல்கள்.
இந்த ‘தரமணி’ திரைப்படத்தை ஜே.எஸ்.கே.பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் தயாரித்து இருக்கிறார் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார்.
“தமிழ் ரசிகர்களை பொறுத்தவரை டிசம்பர் மாதம் என்றாலே அது இசையின் மாதம்தான். ஒவ்வொரு ஆண்டும் பிரமாண்டமாக நடைபெறும் மார்கழி உட்சவம் இசை நிகழ்ச்சியே அதற்கு சிறந்த உதாரணம். எனவேதான் எங்கள் ‘தரமணி’ படத்தின் பாடல்களை இந்த மாதத்தில் வெளியிட நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்.
இதுவரை யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்த சிறந்த பாடல்களுள் மிக சிறந்த பாடல்களாக எங்களின் ‘தரமணி’ இருக்கும். பாடல்களை கேட்ட பின் ரசிகர்கள் இதனை உறுதி செய்வார்கள். புத்தாண்டை வெகு சிறப்பாக கொண்டாடுபவர்கள் ஐ. டி.ஊழியர்கள்.
அந்த வகையில், தரமணி பாடல்கள் அவர்களின் புத்தாண்டு கொண்டாட்டத்தை இரட்டிப்பாக்கும். ஆண் – பெண் உறவை மட்டுமின்றி, ஐ.டி.ஊழியர்களின் வாழ்க்கையையும் ‘தரமணி’ திரைப்படம் உள்ளடக்கி இருப்பதே அதற்கு காரணம்.
வழக்கம் போல ரசிகர்களின் கற்பனைகளை கவர்ந்து இழுக்கும் யுவன்ஷங்கர் ராஜா – இயக்குநர் ராம் கூட்டணி, இந்த முறையும் அதனை முழுமையாக பூர்த்தி செய்யும்….” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ஜே.எஸ்.கே.பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிறுவனரான ஜே.சதீஷ்குமார்.









