தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை கொடுத்து, நட்சத்திர நாயகனாக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு, வருகின்ற 2017-ம் ஆண்டும் வெற்றிகரமான ஆண்டாக அமையும்.
இவர் நடிப்பில், ஜே.எஸ்.கே.பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் தயாரிப்பாளர் ஜே.சதிஷ்குமார் தயாரித்து இருக்கும் ‘புரியாத புதிர்’ திரைப்படம், வருகின்ற பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது.
விஜய் சேதுபதி – ஜே.சதீஷ்குமார் கூட்டணியில் உருவாகும் ஐந்தாவது திரைப்படம் இந்த ‘புரியாத புதிர்’ என்பது குறிப்பிடத்தக்கது.
“விரைவில் பிறக்க இருக்கின்ற தைத்த்திருநாளை வரவேற்க ஒட்டு மொத்த தமிழகமும் உற்சாகத்துடன் தயாராகி கொண்டிருக்கும் இந்த தருவாயில், தரமான திரைப்படங்கள் மூலம் அவர்களின் மகழ்ச்சியை இரட்டிப்பாக்குவது, திரையுலகின் முக்கிய கடமை.
விஜய் சேதுபதிக்கும், தமிழக ரசிகர்களுக்கும் எப்போதுமே ஒரு இணை பிரியா உறவு இருக்கிறது. அதனை பொங்கலன்று வெளியாகும் எங்களின் ‘புரியாத புதிர் திரைப்படம் உறுதிப்படுத்தும். 2017-ம் ஆண்டிற்கான சிறந்ததொரு பொழுதுபோக்கு திரைப்படமாக ‘புரியாத புதிர்’ இருக்கும்….” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ஜே.எஸ்.கே.பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிறுவனர் ஜே.சதீஷ்குமார்.