வித்தியாசமான மேக்கிங்கில் வெளிவரக் காத்திருக்கும் ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படம்

வித்தியாசமான மேக்கிங்கில் வெளிவரக் காத்திருக்கும் ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படம்

நைட் நோஸ்டால்ஜியா பிலிமோடைன்மெண்ட் சார்பில் கார்த்திக் நரேனும், வீனஸ் இன்போடைன்மெண்ட் சார்பில்  கணேஷும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘துருவங்கள் பதினாறு’.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரகுமான் நடித்திருக்கிறார். மேலும், அஸ்வின், பிரகாஷ், டெல்லிகணேஷ், சந்தோஷ் கிருஷ்ணா, கார்த்திகேயன், ப்ரவீன், யாஷிகா, பாலாஹாசன், வினோத்வர்மா, ஷரத்குமார் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

posters-4

எழுத்து, இயக்கம் – கார்த்திக் நரேன், தயாரிப்பு – கார்த்திக் நரேன், நைட் நோஸ்டால்ஜியா பிலிமோடைன்மெண்ட். இணை தயாரிப்பு – கணேஷ், வீனஸ் இன்போடைன்மெண்ட், வெளியீடு- ட்ரீம் பேக்டரி, ஒளிப்பதிவு – சுஜித்சாரங், படத் தொகுப்பு & DI – ஸ்ரீஜித்சாரங், SARANGS DI, இசை – ஜேக்ஸ் பிஜாய், உடை வடிவமைப்பு – அசோக்குமார், கலை – சிவசங்கர், சண்டை பயிற்சி – ஜி, சப்தம் ஒருங்கிணைப்பு – ராஜா கிருஷ்ணன், சிறப்பு சப்தம் – சிங்க் சினிமா, Distribution Head – சக்திவேலன்B, DREAM FACTORY, VFX – சனாத் T.G., புகைப்படம் – ஜெயகுமார் வைரவன், மக்கள் தொடர்பு – நிகில், Designs – சசி & சசி, சின்ன சுரேஷ், நிர்வாக தயாரிப்பு – மணிகண்டன், தயாரிப்பு மேலாளர் – ஹென்றி குமார், Line Producer – சக்தி சரவணன்,

இந்தப் படம் வரும் 30-ம் தேதியன்று திரைக்கு வரவிருப்பதையொட்டி படக் குழுவினர் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

முதலில் படத்தின் முன்னோட்டத்தையும், படம் பார்த்த பிரமுகர்கள் படம் பற்றி தெரிவித்த கருத்துகளையும் திரையிட்டார்கள்.

இயக்குநர் சுந்தர்.சி, சுகாசினி மணிரத்னம், நடிகர் சாந்தனு, தயாரிப்பு நிர்வாகி  வெங்கட் ஆகியோர் படத்தை மிகவும் உயர்வாக வாழ்த்தி பேசியிருந்தனர்.

படத்தின் இசையை இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது அலுவலகத்தில் வெளியிட்டுள்ளார்.

working-stills-8

முதலில் படத்தை வாங்கி வெளியிடும் ட்ரீம் ஃபேக்டரி சார்பில்  பேசிய தயாரிப்பாளர் சக்தி, “நான் வேறொரு படத்தை வாங்கி வெளியிடும் வேலையில் தீவிரமாக இருந்தபோது பல தயாரிப்பாளர்கள் இந்தப் படத்தைச் சொல்லி நல்லது செய்யணும்.. பெயரெடுக்கணும்னு நினைச்சீங்கன்னா இந்தப் படத்தை வாங்கி வெளியிடுங்கன்னு சொல்லி துருவங்கள் பதினாறு படத்தை எனக்கு அறிமுகப்படுத்தி வைச்சாங்க.

நானும் படம் பார்த்தேன். அப்படியே அசந்து போயிட்டேன்.. அந்தளவுக்கு மிக, மிக வித்தியாசமான மேக்கிங்கில் இந்தப் படம் உருவாகியுள்ளது. அதனால்தான் இந்தப் படத்தை நமது டிரீம் பேக்டரி நிறுவனம் மூலம் வாங்கி வெளியிடுகிறோம்…” என்கிறார்.

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குநரான கார்த்திக் நரேன், “இதுவொரு சைக்கலாஜிகல் கிரைம் திரில்லர் என்றாலும் மனதைத் தொடும் கதையையும் கொண்டிருக்கிறது.

working-stills-4

இந்தப் படத்தில் நடிக்கக் கேட்டு ரகுமான் சாரை போய் பார்த்தபோது, முதலில் அவருக்கு என் மேல் நம்பிக்கையே இல்லை. ‘மொதல்ல கதைய சொல்லுங்க.. பார்ப்போம்..’ என்றார். நான் கதையைச் சொன்னவுடன் இம்ப்ரஸ்ஸாகிவிட்ட ரகுமான் ஸார், ‘இந்தப் படத்தில் நான் கண்டிப்பாக நடிக்கிறேன்’ என்றார். இந்தப் படம் முடியும்போது ‘என் சினிமா கேரியரில் நான் நடித்த பெஸ்ட் படம் இதுதான்’ என்று என்னைக் கட்டிப் பிடித்து பாராட்டினார் ரகுமான்.

இந்தப் படம் மேக்கிங்கிலும் நிறைய வித்தியாசப்பட்டிருக்கும். நான் லீனியர் ஸ்கிரீன் பிளே டைப்பில் இதன் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்தப் படம் நிச்சயமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.

படத்தின் கதையென்று பார்த்தால், தீபக் என்னும் காவல் துறை அதிகாரி தனது பணியில் ஒரு வழக்கை விசாரிக்கும்போது நடக்கும் விபத்தில் தனது ஒரு காலை இழக்கிறார். அதன் பின் ஓய்வு பெற்று ஐந்து வருடங்களுக்குப் பின் அந்த வழக்கை மீண்டும் தூசி தட்ட நேரிடுகிறது.

அந்த விசாரணையில் தெரியும் உண்மைகளும், அவரைச் சுற்றி நடக்கும் சம்பவங்களும்தான் இந்த ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படத்தின் கதை..” என்றார்.

ட்ரீம் பேக்டரி நிறுவனம் வெளியிடும் இந்தப் படம், வரும் டிசம்பர் 30-ம் தேதி வெளிவருகிறது. 

Our Score