தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 2017-2019-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய கடந்த ஜூலை 30-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று வடபழனி இசைக் கலைஞர்கள் சங்க அலுவலகத்தில் தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் மொத்தம் 1601 வாக்குகள் பதிவாகின.
இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குநர் விக்ரமன் 1532 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட முரளி 56 வாக்குகள் பெற்றார்.
செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி 1503 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட எம்.மருதுபாண்டியன் 70 வாக்குகள் பெற்றார்.
பொருளாளர் பதவிக்கான போட்டியில் இயக்குநர் பேரரசு 1075 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஆ.ஜெகதீசன் 452 வாக்குகளும், ஏ.கே.டி.எல்லப்பன் 23 வாக்குகளும் பெற்று தோல்வியடைந்தனர்.
துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் 1309 வாக்குகளும், ஆர்.வி.உதயகுமார் 1095 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். வி.சுப்ரமணிய சிவா 544 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.
இணைச் செயலாளர்கள் பதவிக்கான போட்டியில் மனோஜ்குமார் 998 வாக்குகளும், ரமேஷ் கண்ணா 997 வாக்குகளும், ஏ.வெங்கடேஷ் 866 வாக்குகளும், ராஜா கார்த்திக் – 662 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.
இதே பதவிக்குப் போட்டியிட்ட அறிவழகன் என்னும் சோழன் – 560 வாக்குகள், ஐந்து கோவிலான் – 458 வாக்குகள், ஏ.ராமகிருஷ்ணன் – 317 வாக்குகள், பாலமுரளிவர்மன் – 287 வாக்குகள், நாகராஜன் மணிகண்டன் – 156 வாக்குகள், மூதுரை பொய்யாமொழி 120 வாக்குகள், எஸ்.மணிவண்ணன் – 26 வாக்குகளும் பெற்று தோல்வியடைந்தனர்.
12 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 43 பேர் போட்டியிட்டனர். இவர்களில்,
1. சுந்தர்.சி – 1147 வாக்குகள்
2. என்.ஏகம்பவாணன் – 1131 வாக்குகள்
3. லிங்குசாமி – 1120 வாக்குகள்
4. நம்பி – 1093 வாக்குகள்
5. எஸ்.எழில் – 1092 வாக்குகள்
6. மனோபாலா -1080 வாக்குகள்
7. இதயம் கதிர் – 1005 வாக்குகள்
8. ஜெயம் கொண்டான் கண்ணன் – 947 வாக்குகள்
9. சித்ரா லட்சுமணன் – 922 வாக்குகள்
10 .ஆர்கே.கண்ணன் – 915 வாக்குகள்
11. முத்துவடுகு – 684 வாக்குகள்
12. விருமாண்டி – 559 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
இதே பதவிக்குப் போட்டியிட்ட
13. என்.பூமிநாதன் – 551 வாக்குகள்,
14. ஈ.ராமதாஸ் – 526 வாக்குகள்,
15. எஸ்.திருமுருகன் – 434 வாக்குகள்,
16. ஆர்.ஷிபி – 371 வாக்குகள்,
17. டி.பி.கஜேந்திரன் – 346 வாக்குகள்,
18. கதிர் என்கிற கதிர்வேலு – 329 வாக்குகள்,
19. கே.காமராஜ் – 289 வாக்குகள்,
20. எம்.சண்முகம் – 264 வாக்குகள்,
21. கே.ஜவஹர் – 249 வாக்குகள்,
22. ரத்தன் கணபதி – 239 வாக்குகள்,
23. பரசு பாக்கியராஜ் – 222 வாக்குகள்
24. கே.பி.பி.நவீன் – 204 வாக்குகள்
25. ஜி.புருஷோத்தமன் – 202 வாக்குகள்,
26. சுகுமார் என்கிற சூர்யா – 201 வாக்குகள்,
27. ஆர்.முருகதாஸ் என்கிற தாஸ் ராமசாமி – 191 வாக்குகள்,
28. ஏ.வேல்மணி – 182 வாக்குகள்,
29. வேடியப்பன் – 177 வாக்குகள்,
30. எஸ்.கலைச்செல்வன் – 165 வாக்குகள்,
31. டி.ஆர்.விஜயன் – 164 வாக்குகள்,
32. கே.மதிராஜா – 139 வாக்குகள்,
33. என்.ராஜேந்திர குமார் – 114 வாக்குகள்
34. எம்.கிருஷ்ணமூர்த்தி – 82 வாக்குகள்,
35. எம்.சி.சேகர் – 89 வாக்குகள்,
36. ராஜா மகேஷ் – 77 வாக்குகள்,
37. எஸ்.ஜி.விஜயகுமார் – 56 வாக்குகள்,
38. ஜி.கே.லோகநாதன் – 56 வாக்குகள்,
39. ஆரல் தி.மனோகர் – 55 வாக்குகள்,
40. கே.புருஷோத்தமன் – 45 வாக்குகள்,
41. இளஞ்சூரியன் – 39 வாக்குகள்,
42. தி.ஆறுமுகம் – 36 வாக்குகள்,
43. எல்.எத்தீஷ்குமார் – 32 வாக்குகளும்
பெற்று தோல்வியைத் தழுவினார்கள்.