full screen background image

போலீஸ் – ரவுடி மோதலில் உருவாகியிருக்கும் ‘காளியாட்டம்’

போலீஸ் – ரவுடி மோதலில் உருவாகியிருக்கும் ‘காளியாட்டம்’

கிங் பிரதர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் R.K..அயோத்தி  தயாரிக்கும் புதிய படம் ‘காளியாட்டம்.’

‘ராமர்’ பட வெற்றியை  தொடர்ந்து இயக்குநர் வருண் ஆதிராஜா, இந்தப் புதிய படத்தை மிகுந்த  பொருட்செலவில் பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் ‘பப்ளிக் ஸ்டார்’ கதாநாயகனாக நடிக்க  – நாயகியாக  சமீரா நடிக்கிறார். இவர்களுடன் அனைத்து கதாபாத்திரங்களிலும் 50-க்கும் மேற்ப்பட்ட புதுமுகங்கள்  அறிமுகமாகிறார்கள்.

ஒளிப்பதிவு – E.J.நௌட்ஷா, இசை – பிரசாத் நிக்கி, படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், சண்டை பயிற்சி – ஆக்க்ஷன் பிரகாஷ், நடனம் – ராபர்ட், மக்கள் தொடர்பு – நிகில், தயாரிப்பு –  அயோத்தி R.K., கதை – திரைக்கதை – வசனம் – இயக்கம் –  வருண் ஆதிராஜா.

ரவுடிகளின்  ஆதிக்கத்தை அடக்கும் போலீஸ் – போலீஸை மிரள வைக்கும் ரவுடிகள்  – இவர்களின் போராட்டத்தை முற்றிலும் புதிய கோணத்தில், ஜனரஞ்சகமான முறையில் சொல்லும் வகையில் உருவாகியிருக்கிறது இப்படம்.

இப்படத்தின்  முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் 40 நாட்கள் நடைபெற்றது. தொடர்ந்து பொள்ளாச்சி, கோவை, ஊட்டியில் நடைபெற இருக்கிறது.

Our Score