full screen background image

இசைஞானி இளையராஜாவின் இசையில் மீண்டும் பாட வந்த கே.ஜே.ஜேசுதாஸ்..!

இசைஞானி இளையராஜாவின் இசையில் மீண்டும் பாட வந்த கே.ஜே.ஜேசுதாஸ்..!

எஸ்.என்.எஸ். மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘தமிழரசன்.’

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மற்றும் சுரேஷ் கோபி, ராதாரவி சோனு சூட், யோகி பாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி, சாயாசிங், மதுமிதா, சங்கீதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா,  ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,  சென்ட்ராயன், ‘கும்கி’ அஸ்வின்,  மேஜர் கவுதம்,  சுவாமிநாதன்,  முனீஸ்காந்த், ராஜ் கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ்வும் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர், இசை – ‘இசைஞானி’ இளையராஜா, பாடல்கள்  – பழனிபாரதி, ஜெய்ராம், கலை இயக்கம் – மிலன், சண்டை இயக்கம் – அனல் அரசு, படத் தொகுப்பு – புவன் சந்திரசேகர், நடன இயக்கம் – பிருந்தா, சதீஷ், தயாரிப்பு மேற்பார்வை – ராஜா ஸ்ரீதர், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  –   பாபு யோகேஸ்வரன், தயாரிப்பு  – கெளசல்யா ராணி.

IMG_0750

அதிரடி  ஆக்‌ஷன் படமாக இந்த தமிழரசன் திரைப்படம் உருவாகியிருக்கிறது.  இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இரண்டு கட்டமாக நடைபெற்று முடிவடைந்தது. 

இந்த படத்திற்காக பாடலாசிரியர் ஜெயராம் எழுதிய 

“பொறுத்தது போதும் 

 பொங்கிட வேணும் 

புயலென வா” என்ற புரட்சிகரமான வரிகளைக் கொண்ட பாடல் ‘இசைஞானி இளையராஜா’வின் இசையில் மூத்த பாடகரான கே.ஜே.ஜேசுதாஸின் குரலில் பதிவானது.

“2009-ம் ஆண்டு மம்முட்டி நடித்த ‘பழசிராஜா’ என்ற மலையாள படத்தில் பாடிய கே.ஜே.ஜேசுதாஸ் அதற்கு பிறகு எந்த சினிமாவிலும் பாடல்களைப் பாடாமல் தவிர்த்து வந்தார். 10 ஆண்டுகள் கழித்து எங்களது ‘தமிழரசன்’ படத்தில் அவர் பாடியது எங்கள் படக் குழுவினருக்கு கிடைத்த மரியாதை…” என்கிறது படக் குழு.

ilayaraja-k.j.jesudas-4 ilayaraja-k.j.jesudas-3 ilayaraja-k.j.jesudas-2

இந்தப் பாடலை பாடுவதற்காக சமீபத்தில் பிரசாத் ஸ்டூடியோவுக்கு வந்த கே.ஜே.ஜேசுதாஸுக்கு பூங்கொத்து கொடுத்து இசைஞானி இளையராஜா, இயக்குநர் பாபு யோகேஸ்வரன் மற்றும் ஜி.சிவா ஆகியோர் வரவேற்றனர்.

படத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பில் ஒலிக்கப் போகும் இந்தப் பாடல் தமிழ்த் திரையுலகின் புரட்சிகரமான பாடல்கள் பட்டியலில் இடம் பெறப் போவது உறுதி.

Our Score