இந்திய இசையின் எல்லைகளை தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களின் இதயங்களை தொட்ட இசைஞானி, தனது 50 ஆண்டு கால இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் வட அமெரிக்காவில் பிரம்மாண்டமான கச்சேரி சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.
இந்த முக்கியமான உலகளாவிய நிகழ்வை Live மற்றும் இணைந்து நடத்துகின்றன.
“Music for Healing – Ilaiyaraaja Live in Performance” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இசை விழா, சாதாரண கச்சேரி அல்ல. இசை மூலம் உணர்வுகளை குணப்படுத்தும் ஒரு அனுபவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இந்த சுற்றுப்பயணம், அமெரிக்கா மற்றும் கனடாவில் 10க்கும் மேற்பட்ட நகரங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
அதில் (லாஸ் ஏஞ்சல்ஸ்) மற்றும் (பே ஏரியா) போன்ற உலகத் தரமான மேடைகளில் இசை மழை பொழிய உள்ளது.
இளையராஜா 9,000க்கும் மேற்பட்ட பாடல்கள், 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்தவர். இந்திய பாரம்பரிய சங்கீதத்தையும், மேற்கத்திய ஆர்க்கெஸ்ட்ராவையும், எலக்ட்ரானிக் ஒலிகளையும் இணைத்து, தனித்துவமான இசை மொழியை உருவாக்கியவர்.
இந்த சுற்றுப்பயணம் முழுமையான லைவ் ஆர்க்கெஸ்ட்ரா அனுபவமாக இருக்கும். அவரது காலத்தால் அழியாத மெலடிகள், மேடையில் நேரடியாக மீண்டும் உயிர்ப்பிக்கப்படும்.
இந்த நிகழ்ச்சி “Music for Healing” என்ற சமூக முயற்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. கச்சேரி வருவாயின் ஒரு பகுதி, இசையின் மூலம் மனநலம் மற்றும் நலவாழ்வை மேம்படுத்தும் பணிகளுக்காக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
(Mercuri MD & Group CEO):
“இளையராஜாவின் இசை தலைமுறைகளையும், கலாச்சாரங்களையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்த வரலாற்றுச் சுற்றுப்பயணத்தை வட அமெரிக்காவிற்கு கொண்டு வருவது எங்களுக்கு பெருமை.”
(Saregama EVP – Films & Events):
“இந்திய சினிமாவின் ஒலித்தளத்தை வடிவமைத்த இசை இது. உலக ரசிகர்களுக்கு இந்த அனுபவத்தை வழங்குவது மகிழ்ச்சி.
இந்த இசை பயணம் நடைபெறவுள்ள நகரங்களில்:
நியூ ஜெர்சி, வாஷிங்டன் D.C., சிகாகோ, அட்லாண்டா, டாலஸ், ஹூஸ்டன், சீயாட்டில், சான் ஜோசே, டொரான்டோ, மான்ட்ரியல் உள்ளிட்டவை அடங்கும்.
இது ஒரு சாதாரண கச்சேரி சுற்றுப்பயணம் அல்ல.
இது ஒரு இசை புரட்சியின் 50 ஆண்டு கொண்டாட்டம்.
ஒரு தலைமுறையை வடிவமைத்த இசையை, உலக மேடையில் மீண்டும் அனுபவிக்கும் அபூர்வ வாய்ப்பு.
இசை வாழ்க…! இளையராஜா வாழ்க!









