வெளியாகாத படங்களின் விபரங்கள் தேவை – தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு

வெளியாகாத படங்களின் விபரங்கள் தேவை – தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு

கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையில் தயாரிக்கப்பட்டு, தணிக்கையும் செய்யப்பட்டு..  இப்போதுவரையிலும் வெளி வராமல் இருக்கும் திரைப்படங்கள் பற்றிய விபரங்களை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தனது சங்க உறுப்பினர்களிடத்தில் கேட்டுள்ளது.

இது தொடர்பாக தனது சங்க உறுப்பினர்களுக்கு அனுப்பி உள்ள கடிதம் இது :

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் 2015 முதல் 2021 வரை தயாரித்துள்ள திரைப்படங்களில், எந்தவித விற்பனையும் செய்யாமல் உள்ள திரைப்படங்கள், டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் விற்பனை செய்யாமல் உள்ள திரைப்படங்கள் மற்றும் திரையரங்குகளில் வெளியிட முடியாமல் உள்ள திரைப்படங்கள் ஆகியவற்றின் விபரங்ககளை தர வேண்டும்.

ஏதாவது ஒரு நிறுவனத்திற்கு உரிமம் அளித்திருந்தால் அதன் முழு விவரங்களையும் அளிக்க வேண்டும். மேலும் அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் விபரங்களையும் எந்த லேப்-பில் படம் உள்ளது என்ற முழு விவரம், சம்பந்தப்பட்ட திரைப்படத்தில் ஏதேனும் பிரச்சினை இருப்பின், அந்தப் பிரச்சினை குறித்த முழு விவரங்கள் அனைத்தையும் தங்களது லெட்டர் பேடில் கடிதமாக எழுதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் வருகிற 28-ம் தேதிக்குள் தெரிவிக்க  வேண்டும்..” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தனது சங்க உறுப்பினர்களுக்காகவே உருவாக்க இருக்கும் ஓடிடி தளத்திற்காக இந்த விபரங்கள் கேட்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.  

Our Score