‘மாயத்திரை’ படம் U/A சான்றிதழ் பெற்றது..!

‘மாயத்திரை’ படம் U/A சான்றிதழ் பெற்றது..!

ஸ்ரீசங்கர நாராயணா சாமுண்டேஸ்வரி மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் வி.சாய் பாபு தயாரித்துள்ள திரைப்படம் ‘மாயத்திரை.’ 

இந்தப் படத்தில் பிடிச்சிருக்கு’, ‘முருகா’, ‘கோழி கூவுது’ போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் குமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ‘டூ லெட்’, ‘திரௌபதி’  படங்களின் நாயகியான ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடித்துள்ளார்.

இயக்கம் – தி.சம்பத் குமார், தயாரிப்பு – V.சாய் பாபு, இசை – S.N.அருணகிரி, ஒளிப்பதிவு – இளையராஜா, கலை இயக்கம்  – பத்மஸ்ரீ தோட்டா தரணி, நடனம் – ராதிகா, சண்டை இயக்கம் – பிரதீப் தினேஷ், சவுண்ட் என்ஜினியர் – அசோக், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹ்மத்.

மாயத்திரை’ படம் பற்றி இயக்குநர் தி.சம்பத் குமார் பேசுகையில், “ஒரு திரில்லர் கலந்த பேய் படம். ஆனால், வழக்கமான பேய் படங்களிலிருந்து இது மாறுபட்டதாக இருக்கும். இந்தப் படத்தில் அதிகமாக பயமுறுத்தும் காட்சிகள் இருக்காது. அதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை  குடும்பத்தோடு வந்து  பார்த்து ரசிக்கும்படி பொழுதுபோக்கு படமாக இருக்கும்…” என்றார்.

இப்படத்திற்கு  சென்சார் குழுவினரால்  U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் திறந்த சில வாரங்களில் வெள்ளித்திரை விருந்தாக மாயத்திரை’ திரைக்கு வர இருக்கிறது.

 
Our Score