இங்கிலாந்து பிலிம் பெஸ்டிவலில் சுட்ட கதை, தங்கமீன்கள்..!

இங்கிலாந்து பிலிம் பெஸ்டிவலில் சுட்ட கதை, தங்கமீன்கள்..!

லிப்ரா புரொடெக்சன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்த ‘சுட்டக்கதை’ திரைப்படம் இங்கிலாந்தில் வருடாவருடம் நடைபெறும் Bournemouth international film festival-ல் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளதாம்.

மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீஸான இந்தப் படம் மிகப் பெரிய தோல்வியைத்தான் சந்தித்த்து. அதே நேரத்தில் படம் தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்த அதே நேரத்திலேயே புதிதாகத் துவக்கப்பட்டிருந்த ‘புதுயுகம்’ தொலைக்காட்சியிலும் ஓடி சாதனை படைத்த்து..

இப்போது இந்த பிலிம் பெஸ்டிவலுக்கு ‘தங்கமீன்கள்’ படத்துடன் சுட்டக்கதையும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறதாம்.  இந்த பிலிம் பெஸ்டிவல் வரும் ஜூன் 6, 7 தேதிகளில் நடைபெறவுள்ளது.

சுட்டக் கதை மற்றும் தங்க மீன்கள் படக்குழுவினருக்கு எமது வாழ்த்துகள்..!

Our Score