full screen background image

என்னமா யோசிச்சு படத்துக்கு டைட்டில் வைக்குறாய்ங்கோ..!

என்னமா யோசிச்சு படத்துக்கு டைட்டில் வைக்குறாய்ங்கோ..!

ஒரு திரைப்படத்தின் தலைப்பே பாதி கதையைச் சொல்லிவிடும் என்பார்கள். மக்கள் எளிதில் உச்சரிப்பதுபோலவோ, மிக எளிமையான வார்த்தையால் கதையைச் சொல்லிவிடும் வித்த்தில் தலைப்புகளை வைத்து மக்களை ஈர்க்க வைத்தார்கள் முந்தைய தலைமுறை இயக்குநர்கள். இப்போது அதற்கு நேரெதிர்.

பாடல் காட்சிகளில் வரும் வரியை போலவே யாருக்கும் புரியாதது போலவும்..  சம்பந்தமேயில்லாத வார்த்தைகளை வைத்தும் ஏதோ ஒரு தலைப்பை பதிவு செய்து வைக்கிறார்கள் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும்.

சமீபகாலம்வரைக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்திருக்கும் சில தலைப்புகளை பாருங்கள்..

  1. நானே ஒரு டூபாக்கூர்.. எனக்கேவா..
  2. மண்ணாங்கட்டிப் பயலுக
  3. வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்
  4. நட்புக் காப்புக் குழு
  5. பித்தேரி
  6. நேரா போய் நேரா போ
  7. தீத்துக்கட்டு
  8. கிடா பூசாரி மகுடி
  9. பட்ற
  10. நேற்றைக்கு மழை பெய்யும்
  11. பதினேழு ஜி.பி.
  12. தருதலை
  13. எண்றதுக்குள்ள
  14. அழகர் களத்துல இறங்கிட்டாரு.
  15. வந்தேறிகள்

 நல்லா வாழும் தமிழ்ச் சினிமா..!

Our Score