full screen background image

சன்னி லியோன் நடிக்கும் ‘OH MY GHOST(OMG)’ தமிழ்த் திரைப்படம்

சன்னி லியோன் நடிக்கும் ‘OH MY GHOST(OMG)’ தமிழ்த் திரைப்படம்

VAU MEDIA ENTERTAINMENT & WHITE HORSE STUDIOS நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் D.வீரா  சக்தி  & K.சசிகுமார் இருவரும் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘OH MY GHOST (OMG) ஓ மை கோஸ்ட்’!

இந்தப் படத்தில் கனடாவில் ஆபாசப் படங்களில் நடித்துப் புகழ் பெற்ற நடிகையான சன்னி லியோன் நடிக்கிறார்.

மேலும், நடிகை தர்ஷா குப்தா, நடிகர் சதீஷ் இருவரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்க துரை மற்றும் சில முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தீபக் D. மேனன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ‘சிந்தனை செய்’ படத்தை இயக்கிய இயக்குநர்  R.யுவன் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

இந்தப் படம் வரலாற்று பின்னணியில், உருவாகும் ஹாரர் காமெடி கலந்த திரைப்படம்.

இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் D.வீரா சக்தி பேசும்போது, “பொதுவாக, OMG (OH MY GOD) என்பது இன்று அனைவரிடமும் வழக்கத்தில் புழங்கக் கூடிய ஒரு முக்கியமான வார்த்தை பிரயோகம்  ஆகும். மேலும் உரையாடலின்போது ஆச்சரியமான எந்த  ஒன்றையும் தெரிவிக்கும் போது OMG (OH MY GOD) வார்த்தையும் பயன்படுத்தப்படுகிறது.

எங்கள் திரைப்படமும்  அதிர்ச்சியும், ஆச்சர்யமும் தரும் பல விசயங்களை கொண்டிருப்பதால், இந்த OMG – OH MY GHOST என்ற தலைப்பு இதற்குப் பொருத்தமானதாக இருக்கும் என்று நாங்கள் நம்பினோம்.

ரசிகர்கள் ஒரு மாறுபட்ட பேயை இப்படத்தில் பார்ப்பார்கள். இப்படம் இதுவரையிலும் நாம் திரையில் கண்டிராத  ஒரு வித்தியாமான ஹாரர் அனுபவத்தை தரும்…” என்றார்.

சன்னி லியோன் இதற்கு முன்பாக பல்வேறு தமிழ்ப் படங்களில் நடிக்க ஒப்பந்தமானாலும் இதுவரையிலும் அந்தப் படங்களின் படப்பிடிப்புகள் துவங்கவில்லை. ஆனால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்டது. நடிகை சன்னி லியோன் விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இணையவுள்ளார்.

Our Score