‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களான மகத், ஐஸ்வர்யா தத்தா இருவரும் தற்போது ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார்கள்.
படத்தின் பெயர் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’.
இந்தப் படத்தை வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஆர்.டி.மதன்குமார் தயாரிக்கிறார்,
படத்தில் மேலும் யோகி பாபு, ‘மொட்டை’ ராஜேந்திரன், சாக்சி அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அறிமுக நடிகரான ஆதவ் வில்லனாக நடிக்கிறார்.
பாஸ்கர், கலை இயக்கம் – கிஷோர், பாடல்கள் – லோகன், சண்டை இயக்கம் – ஸ்டன்னர் சாம், நடன இயக்கம் – சாண்டி, SFX – கண்ணன், எழுத்து, இயக்கம் – சி.பிரபு ராம்.
தற்போதைய தமிழ் சினிமாவின் காமெடி நாயகனாக வலம் வரும் யோகி பாபு, இப்படத்தில் புதையலை தேடும் கடற் கொள்ளையனான ப்ளாக் ஸ்பாரோ(Black Sparrow)வாக நடிக்கிறார்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் படத்தின் அனைத்துக் கதாப்பாத்திரங்களும் ஒரு ரிசாட்டிற்குள் யோகி பாபுவிடம் மாட்டிக் கொண்டு முழிப்பது பெரும் காமெடி கலாட்டாவாக அமைக்கப்பட்டிருக்கிறது.
இவையனைத்தும் ப்ளாக் ஸ்பாரோ(Black Sparrow) கதாப்பாத்திரம் மீது பரிதாபம் தோன்றுவது போலவும், அது மேலும் நகைச்சுவையை உண்டாக்கும்படியும் கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் குறித்து இயக்குநர் பிரபு ராம் பேசும்போது, “மகத் ஒரு வட சென்னை இளைஞராக, சிம்புவின் தீவிரமான ரசிகராக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.
மகத்-ஐஸ்வர்யா தத்தா இருவரின் நட்பும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலமாக மக்களுக்கு தெரிந்ததுதான். இது மகத் கதாபாத்திரத்திற்கு கூடுதல் மைலேஜாக இருக்கும் என்று நினைக்கிறோம். இந்தப் படத்தில் மகத் நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தலைப்பாக இது இருக்கும்.
இது ஒரு ரொமாண்டிக் காமெடி படம் என்றாலும், படத்தில் எமோஷனல் காட்சிகளும் மிகவும் மென்மையாக கையாளப்பட்டுள்ளன. மகத் மற்றும் பணக்கார குடும்ப பெண்ணாக நடித்துள்ள ஐஸ்வர்யாவின் கெமிஸ்ட்ரி நிச்சயம் பேசப்படும்.
இரண்டு ஆண்கள், அதாவது ஹீரோ மஹத்தும், வில்லன் ஆதவ்வும் ஐஸ்வர்யா தத்தாவை காதலிக்கிறார்கள். ஐஸ்வர்யா ஆதவுக்கென்று முடிவாகி திருமண நிச்சயதார்த்தமும் நடக்கிறது.
எல்லா வகையிலும் தன்னை விட உயர்ந்தவரான ஆதவ்வின் கேரக்டரையும் தாண்டி மஹத் எப்படி ஐஸ்வ்யா தத்தாவை கை பிடிக்கிறார் என்பதுதான் கதை.
பல முன்னணி கலைஞர்களின் பங்களிப்பில் காதலும், காமெடியும் கலந்த கமர்ஷியல் படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது…” என்றார்.
தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.