full screen background image

‘ருத்ர தாண்டவம்’ படத்திற்கு கிறிஸ்துவ அமைப்புகள் எதிர்ப்பு

‘ருத்ர தாண்டவம்’ படத்திற்கு கிறிஸ்துவ அமைப்புகள் எதிர்ப்பு

திரெளபதி’ படத்தின் இயக்குநரான மோகன்.ஜி இயக்கத்தில் தயாராகி உள்ள புதிய படம் ‘ருத்ர தாண்டவம்’.

ரிச்சர்ட் ரிஷி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் குக் வித் கோமாளி’ பிரபலம் தர்ஷா குப்தா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் இயக்குர் கவுதம் மேனன், நடிகர் ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. டிரெயிலரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் சட்டப் பிரிவில் ஆதரவாக இருக்கும் ஒரு குறிப்பிட்ட பிரிவு தவறுதலாக, துஷ்பிரயோகம் செய்யப்படுவதை சொல்வதாக காட்சிகள் அமைந்திருந்தன.

இதையடுத்து இப்படத்திற்கு எதிர்ப்பு குரல்களும் எழுந்து வருகின்றன. இந்நிலையில், இந்த ருத்ர தாண்டவம்’ படத்தை தடை செய்யக் கோரி காவல் துறையிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

நேற்று சென்னை டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வந்த சிறுபான்மை மக்கள் நல கட்சியினர் இது குறித்து போலீஸாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், “கிறிஸ்தவர்கள் குறித்த தவறான தகவல்களை ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் இயக்குர் மோகன் ஜி பதிவு செய்திருக்கிறார். மதக் கலவரத்தை தூண்டும் வகையில் உள்ள அந்த படத்தை தடை செய்வதோடு, இயக்குநர் மோகன்.ஜி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தங்களது புகாரில் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் திரெளபதி’ படத்திலும் இந்தப் படக் குழுவினருக்கு பிரச்சினைகள் எழுந்தன. “ஆணவக் கொலைகள் அத்தனையும் உண்மையல்ல. அதில் பொய்யும் கலந்திருக்கிறது…” என்ற கருத்து தொனிக்க படத்தின் கதை அமைந்திருந்ததால் இப்போதுவரையிலும் அத்திரைப்படம் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

தற்போது இதே இயக்குநர் இயக்கியிருக்கும் இந்த ‘ருத்ர தாண்டவம்’ படமும் இதே போன்று ஒரு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

Our Score