full screen background image

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஓராண்டு சாதனைகள்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஓராண்டு சாதனைகள்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகத்தின் மீது பல புகார்கள் எழுப்பப்பட்டு வரும் சூழலில், இதுவரையிலும் சங்கம் செயல்பட்டவிதம் குறித்தும் செய்து முடித்திருக்கும் பணிகள் குறித்தும் அந்த சங்கத்தினர் ஒரு நீண்ட அறிக்கையை இன்றைக்கு வெளியிட்டுள்ளனர்.

அது இங்கே :

2015-ம் ஆண்டுக்கான தீபாவளி பரிசு பொருட்கள்

நமது சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்து அனைவருக்கும் வேட்டி, சேலை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதேபோல் அனைத்து மாவட்ட நாடக நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் நமது செயற்குழு உறுப்பினர்கள் மூலம் இலவச வேட்டி, சேலை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

வெள்ள நிவாரண நிதி

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நமது சங்கத்தின் சார்பில் ‘The Environment Foundation of India’ என்ற NGO மற்றும் புவனகிரி தாசில்தார் மூலமாக மளிகை பொருட்கள், உணவு பொருட்கள், சமையல் பாத்திரங்கள், துணிமணிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை கோட்டூர்புரத்தில் குடியிருந்த நமது சங்க உறுப்பினர்கள் பலரும் கடந்தாண்டு பெய்த பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர். அப்போது நமது சங்கத்தினர் அவர்களை வெள்ள பாதிப்பிலிருந்து காப்பாற்றி, பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்று, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்பட்டன என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நமது உறுப்பினர்கள் அனைவருக்கும் நமது சங்கத்தின் சார்பில் அத்தியாவசிய பொருட்கள், உணவு, மளிகை பொருட்கள், சமையல் பாத்திரங்கள், துணிமணிகள் மற்றும் இதர பொருட்கள் வழங்கப்பட்டன என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக.. முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக.. நமது நடிகர் சங்க உறுப்பினர்களாக உள்ள திரு.ரஜினிகாந்த்(10 லட்சம்), திரு.கமல்ஹாசன்(15 லட்சம்), திரு.சூர்யா மற்றும் திரு.கார்த்தி (25 லட்சம்), திரு.விஷால்(10 லட்சம்), திரு.சத்யராஜ்(2 லட்சம்), திரு.சிபிராஜ் (25,000), திரு.சிவகார்த்திகேயன்(5 லட்சம்), திரு.தனுஷ்(5 லட்சம்), திருமதி.ரம்பா இந்திரகுமார்(5 லட்சம்), திரு.சூரி(1 லட்சம்), திரு.விக்ரம்(10 லட்சம்), திரு.ஜீவா(10 லட்சம்), திரு.பிரபு மற்றும் திரு.விக்ரம் பிரபு(5 லட்சம்), திரு.பாபி சிம்ஹா(1 லட்சம்), திருமதி.சரோஜா தேவி(5 லட்சம்), திரு.எம்.எஸ்.பாஸ்கர்(1 லட்சம்) ஆகியோர் நன்கொடையாக வழங்கிய 1 கோடியே 10 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் தமிழக முதலமைச்சர் அவர்களிடம் 11.01.2016 அன்று தலைமை செயலகத்தில் நேரில் வழங்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

வரி விலக்கு சான்றிதழ் 80-G

நமது சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் வருமான வரித்துறைக்கு வரவு, செலவு கணக்கினை முறையாகவும், முழுமையாகவும் தாக்கல் செய்யாத காரணத்தால், நமது சங்கத்திற்கு அதுவரையிலும் கொடுக்கப்பட்டிருந்த 80-G வரிவிலக்கு சான்றிதழை வருமான வரித்துறை ரத்து செய்திருந்தது.

இதனால், நமது சங்க அறக்கட்டளைக்கு நன்கொடை செய்ய வருபவர்களுக்கு ,வரிவிலக்கு சான்றிதழ் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டதால், நமது சங்கத்திற்கு யாரும் நன்கொடை அளிக்க முன் வரவில்லை.

இந்த நிலையில் நமது சங்க பொருளாளரும், டிரஸ்ட்டியுமான திரு. கார்த்தி அவர்கள் பொருளாளராகப் பொறுப்பேற்ற 45 நாட்களில், வருமான வரித்துறையிடமிருந்து 80-G வரிவிலக்கு சான்றிதழை நமது சங்கத்திற்கு பெற்று தந்துள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

உறுப்பினர்களின் முழு விவரப் பட்டியல் (Database)

நமது சங்க அலுவலகத்தில் உறுப்பினர்களின் முழு விவரப் பட்டியல்(Database) சரியாகவும், முழுமையாகவும் இல்லாத காரணத்தால் உறுப்பினர்களுக்கும், நிர்வாகத்திற்கும் கடித போக்குவரத்துகள் இல்லாத சூழ்நிலை இருந்து வந்தது.

இந்த நிலையை போக்க உறுப்பினர்களின் முழு விவரப் பட்டியலை(Database) தயாரிக்க சென்னை மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர்களை நேரடியாக சந்தித்து 80% உறுப்பினர்கள் பற்றிய விவரங்களைப் பெற்று அதனை செயல்படுத்தி உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

உறுப்பினர்களுக்கான மருத்துவ முகாம் (Medical Camp)

நமது சங்கத்தைச் சேர்ந்த ஊனமுற்ற உறுப்பினர்களுக்கு மூன்று சக்கர வண்டி, காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நமது சங்கத்தில் இருக்கும் வயதான கண் பார்வை குறைபாடு உள்ள உறுப்பினர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு, ஆலயம் ஆப்டிக்கல்ஸ் சென்டர் மூலம் அவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

SPI Cinemas ஒப்பந்தம் ரத்து

கடந்த நிர்வாகத்தினரால் SPI Cinemas-க்கும், நடிகர் சங்கத்திற்கும் இடையே புதிய கட்டிடம் கட்டுவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்காக, இழப்பீட்டுத் தொகையாக 2 கோடியே 48 லட்சம் ரூபாய் SPI Cinemas நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு, கடந்த 08.02.2016 அன்று மதியம் 2 மணியளவில் நமது சங்கத்திற்கும் SPI Cinemas நிறுவனத்திற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டிருந்த அனைத்து ஒப்பந்தங்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுவிட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

உறுப்பினர்களின் குடும்பத்திற்கு A.C.S. மருத்துவ அடையாள அட்டை

நமது சங்க உறுப்பினர்களுக்கு குருதட்சணை திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சிகிச்சை வழங்க, சென்னை A.C.S. மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி பெற்று தந்துள்ளோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

62-ம் ஆண்டு பொதுக் குழுவில் பொற்கிழி வழங்கியது

சமீபத்தில் நடைபெற்ற 62-ம் ஆண்டு பேரவை கூட்டத்தில் நடிக பூபதி திரு.பி.யூ.சின்னப்பா அவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.1,00,000/- காசோலையும், பொற்கிழியும், கேடயமும், நினைவு பரிசும் வழங்கி பாராட்டு செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

62-ம் ஆண்டு பேரவை கூட்டத்தில் சங்கரதாஸ் சுவாமிகள் பற்றி விவரம் தெரிந்த மூத்த கலைஞர்களுக்கு மாவட்ட நாடக நடிகர் சங்கம் மற்றும் மாவட்ட நியமன செயற்குழு உறுப்பினர்களின் பரிந்துரையின்படி 15 மூத்த உறுப்பினர்களுக்கு தலா 20,000 ரூபாய் காசோலையும், பொற்கிழியும், கேடயமும் நினைவு பரிசும் வழங்கி பாராட்டு செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

நட்சத்திர கிரிக்கெட்

கடந்த ஏப்ரல் 17-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டு அரங்கில் நமது சங்கத்திற்கு நிதி திரட்டும் பொருட்டு, நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் நமது சங்கத்தைச் சேர்ந்த பல மூத்த உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.

அந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் ஆட்ட நாயகனாக வெற்றி பெறும் நபருக்கு கார் ஒன்றை பரிசாக அளிப்பதாக சேலத்தை சேர்ந்த THE TRUE SAI WORKS நிறுவனம் தெரிவித்திருந்தது. அதன்படி அந்த கிரிக்கெட் போட்டியில், சிறந்த ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட நடிகர் திரு.விக்ராந்த் அவர்களுக்கு ஒரு காரை பரிசாக அளித்தனர். ஆனால் திரு.விக்ராந்த் அந்த காரை அவர் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நன்கொடையாக கொடுத்துவிட்டார். அதற்காக அவருக்கு நமது சங்கத்தின் செயற்குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

SIP MEMORIAL TRUST நிதி உதவி

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.

உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம்

குருதட்சணை திட்டத்தின் கீழ் நமது சங்க உறுப்பினர்களில் 80 வயதிற்கு மேல் உள்ள 72 உறுப்பினர்களுக்கு ரூ.2000/- வீதம் மாத உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

குருதட்சணை திட்டத்தின் கீழ் நமது சங்க உறுப்பினர்களில் 70 வயது முதல் 79 வயது வரை உள்ள 91 உறுப்பினர்களுக்கு ரூ.1000/- வீதம் மாத உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

மாற்று திறனாளிகளுக்கு மாத ஓய்வூதியம்

குருதட்சணை திட்டத்தின் கீழ் நமது சங்க உறுப்பினர்களில் உள்ள மாற்று திறனாளிகள் 12 நபர்களுக்கு ரூ.2000/- வீதம் மாத உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

பட்டப் படிப்புக்கான இலவச கல்வி 

குருதட்சணை திட்டத்தின் கீழ் நமது சங்க உறுப்பினர்களின் குழந்தைகளில் +2 முடித்த மாணவ, மாணவியர்களில் 25 நபர்களுக்கு இலவசமாக பட்டப் படிப்பு படிக்க, வேல்ஸ் பல்கலைக்கழகத்திலும், எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் நமது சங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை செயற்குழுவிற்கு தெரிவித்துக் கொண்டு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை

நமது சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் ஜுன் மாதத்தில் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். அதனடிப்படையில் 178 உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு நடிகர் சங்க சாரிட்டபிள் டிரஸ்ட் வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 8,41,000/- ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரையிலும் தேர்தல் நேரங்களில் நாடகங்கள் நடந்த தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது நமது சங்கத்தின் புதிய நிர்வாகம் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி நாடகம் நடத்துவதற்கான அனுமதியைப் பெற்று தந்துள்ளோம்.

உறுப்பினர் அல்லாதவர்களுக்கு(Non – Member) வேலை வாய்ப்பு வழங்குவதை நிறுத்தி வைத்துவிட்டு. உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகமாக வழங்கப்பட்டது.

உறுப்பினர்களுக்கு 10 ஆண்டு காலமாக நிலுவையில் இருந்த ஊதிய தொகை பேசி வாங்கித் தரப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி பிறந்த மூத்த உறுப்பினர்களை அழைத்து பிறந்த நாள் விழா கொண்டாடியது.

உறுப்பினர்களின் விவரங்களை இணைதளத்தில் பார்க்கும் வசதி

புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற இந்த ஓராண்டில் முதல் வருடத்திற்கான கணக்கு வழக்குகளை குறித்த நேரத்தில் தணிக்கை செய்யப்பட்டது இதுவே முதன் முறை.”

இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Our Score