ரெஜினா கேஸண்ட்ராவின் ‘சூர்ப்பனகை’ திரைப்படத்தின் பரபரப்பான போஸ்டர்

ரெஜினா கேஸண்ட்ராவின் ‘சூர்ப்பனகை’ திரைப்படத்தின் பரபரப்பான போஸ்டர்

நடிகை ரெஜினா கேஸண்ட்ரா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘சூர்ப்பனகை’ திரைப்படம் அதன் தலைப்பு மற்றும்  வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக்  ஆகியவற்றால், ரசிகர்கர்களிடம் பேராதரவைப் பெற்றுள்ளது.

Apple Tree Studios நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ராஜசேகர் வர்மா இப்படத்தைத் தயாரித்துள்ளார்.  

இப்படத்தில் நடிகை ரெஜினா கஸண்ட்ரா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க, அக்ஷரா கவுடா, மன்சூர் அலிகான், ஜெயப்பிரகாஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

ஒவ்வொரு படத்திலும் தனது மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை ரெஜினா கஸண்ட்ரா இப்படத்தில் தொல் பொருள் ஆய்வாளராக நடித்துள்ளார்.

சாம் C.S. இசையமைக்கிறார். கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்கிறார். சாபு படத் தொகுப்பு செய்துள்ளார். சூப்பர் சுப்பராயன் சண்டை இயக்கம் செய்துள்ளார்.

இயக்குநர் கார்த்திக் ராஜுவின் இயக்கத்தில்  இரு மொழிகளில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இயக்குநர் கார்த்திக் ராஜு சூர்ப்பனகை’ படம் குறித்துப் பேசும்போது, “இந்தப் படத்தின் முழுப் படப்பிடிப்பும் மிக இனிமையாக நடந்தேறியது. நாங்கள் தற்போது போஸ்ட் புரடக்சன் வேலைகளை தீவிரமாக செய்து வருகிறோம், விரைவில் படத்தின்  டிரெய்லரை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

இந்த சூர்ப்பனகை’ படம் அதன் பரபர  காட்சிகள், திகில், மர்மம்  மற்றும்  நகைச்சுவை கூறுகள் ஆகியவற்றால் பார்வையாளர்களுக்கு ஒரு புதுவிதமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும்…” என்றார்.

படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் குற்றாலம் பகுதியில்  படமாக்கப்பட்டுள்ளது.

Our Score