full screen background image

விஜய் சேதுபதி ஹிந்தியில் நடிக்கும் மவுனப் படம்..!

விஜய் சேதுபதி ஹிந்தியில் நடிக்கும் மவுனப் படம்..!

கை நிறைய படங்களை வைத்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ஹிந்தி படம். அதிலும் மெளனப் படம் என்பதுதான் இதன் ஸ்பெஷலாட்டி.

‘காந்தி டாக்கீஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, இயக்குநர் கிஷோர் பாண்டுரங் இயக்குகிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் ஹைதாரி நடிக்கவிருக்கிறார்.

இந்தப் படத்தில் நடிப்பது குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது, “நான் தற்போது இந்தியில் ‘காந்தி டாக்ஸ்’ என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளேன். அதில் வசனங்களே கிடையாது. அது ஒரு மவுனப் படம்.

நான் தற்போது முன்பைவிட நன்றாகவே இந்தி பேசுகிறேன். இயக்குநர்கள் ராஜ் – டிகே இயக்கும் வெப் சீரிஸ் மற்றும் சந்தோஷ் சிவன் இயக்கும் ‘மும்பைகார்’ படங்களுக்காக நான் இந்தி சரளமாக பேச கற்று வருகிறேன்.

ஒரு நடிகரின் வார்த்தையைவிட அவரது மவுனமே நிறைய பேச வேண்டும் என்று நான் நம்புகிறேன். என்னை பொறுத்தவரை அதுவே உண்மை. உணர்வுகளை வெளிப்படுத்துவதன் மூலமே வார்த்தைகளை உணர முடியும். நான் பேசாமல் இருக்கும்போதுதான் என்னுடைய உணர்வுகள் வெளிப்படுகின்றன…” என தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.

Our Score