full screen background image

‘ருத்ர தாண்டவம்’ படத்திற்கு U / A சான்றிதழ்

‘ருத்ர தாண்டவம்’ படத்திற்கு U / A சான்றிதழ்

கடந்த ஆண்டு  இயக்குநர் ஜி.மோகனின் இயக்கத்தில்  ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘திரெளபதி’.

“ஆணவக் கொலைகள் அனைத்தும் உண்மையல்ல” என்னும் கருத்துடன் வெளியான இத்திரைப்படம் தமிழகத்தில் மிகப் பெரிய சர்ச்சயைக் கிளப்பியது.  

தியேட்டர்களில் மட்டுமே தொடர்ந்து 3 வாரங்கள் ஓடிய இந்தப் படம், தமிழ்நாட்டில் மட்டும் 14.28 கோடி ரூபாய்வரையிலும் வசூல் செய்தது.

இதையடுத்து இயக்குநர் மோகன்.ஜி அடுத்ததாக ‘ருத்ர தாண்டவம்’ என்ற படத்தை ‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ரிஷியுடன் இணைந்து இயக்கியுள்ளார். ‘குக் வித் கோமாளி’ புகழ் தர்ஷா குப்தா இந்த படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

இயக்குர் கவுதம் மேனன், ராதாரவி, மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்தப் படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் ஒரு சில கட்டுகளுடன் படத்திற்கு U / A சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

திரெளபதி’ படத்திற்கு 14 இடங்களில் சென்சார் போர்டு கட் சொல்லியிருந்தது. மேலும், குறிப்பிட்ட கட்சித் தலைவரை குறிக்கும்விதமாக வசனங்கள் இருப்பதாகவும் சர்ச்சை எழ, அதையும் கோர்ட் வரையிலும் சென்று நீக்க உத்தரவு வாங்கியது நினைவிருக்கலாம்.

இப்போது இந்தப் படத்திற்கும் சில கட்டுகள் கிடைத்திருப்பதால் நிச்சயம் இதுவும் அரசியல், ஜாதி சார்ந்த படமாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. 

Our Score