full screen background image

“சிம்பு தம்பின்னா.. சிவகார்த்திகேயன் யாரு..?” தனுஷுக்கு பறந்த கேள்விகள்..!

“சிம்பு தம்பின்னா.. சிவகார்த்திகேயன் யாரு..?” தனுஷுக்கு பறந்த கேள்விகள்..!

அண்ணன் செல்வராகவனும், தனது இணை பிரியாத தோழரான சிம்புவும் இணைந்து உருவாக்கப் போகும் படத்திற்காக நேற்று டிவீட்டரில் அவர்களுக்கு வாழ்த்து சொன்னார் தனுஷ்.

எல்லாம் வழக்கம்போலத்தானே என்றாலும் அதில் ஒரு வார்த்தை சொருகப்பட்டிருந்தது. சிம்புவை “என் தம்பி” என்று தனுஷ் குறிப்பிட்டிருந்தார். 

தனுஷ் இதுவரையில் சிம்பு பற்றி சொல்லாத வார்த்தையாச்சே இது..? ‘இணை பிரியாத தோழர்.. நண்பர்’ என்றெல்லாம் அழைக்கப்பட்ட சிம்பு எப்போதில் இருந்து தனுஷுக்கு தம்பியானார் என்று தனுஷ் அண்ணனின் வளர்ப்பு தம்பியின் ரசிகர்கள் குழம்பிப் போனார்கள்.

வளர்ப்பு தம்பியான சிவகார்த்திகேயன் அமைதியாய் இருந்தாலும் அவருடைய ரசிகப் பிள்ளைகள் டிவீட்டரில் தனுஷுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்க.. அவரும் “சிவா எனது தம்பிதான்ய்யா.. செல்போன்ல தம்பின்னுதான்யா அவன் நம்பரை நோட் பண்ணி வைச்சிருக்கேன். ஆளை விடுங்கய்யா..” என்று சொல்லி தற்போதைக்கு எஸ்கேப்பாகியிருக்கிறார்.

dhanush-sivakarthikeyan-2

வர வர கோடம்பாக்க அரசியலும், தமிழ்நாட்டு அரசியல் மாதிரி கேள்விக்குள்ளாகிகிட்டே வருது..!

Our Score