நடிகர் தனுஷ் டிவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள்..!

நடிகர் தனுஷ் டிவிட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள்..!

டிவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் பழக்கத்தை விஜய் துவக்கி வைத்தார். ‘கத்தி’ படத்தின் பிரமோஷனுக்காகவே அதனை பயன்படுத்திக் கொண்டார்கள்.

இப்போது ‘அனேகன்’ படத்தின் பிரமோஷனுக்காக நடிகர் தனுஷ் இன்று இரவு 8.30 மணிக்கு டிவிட்டரில் தனது ரசிகர்களுக்கு பதிலளித்தார்.

அதிலிருந்து சில கேள்வி-பதில்கள் இங்கே :

கேள்வி : உங்கள் சினிமா வாழ்கையில் நீங்கள் மிகவும் சிரமப்பட்டு நடித்த கதாபாத்திரம் எது..?

தனுஷ் பதில் : ‘ஷமிதாப்’, ‘ஆடுகளம்’, ‘புதுப்பேட்டை’, ‘மரியான்’.

கேள்வி : இரண்டு ஹீரோ கதாபாத்திரத்தில் எப்போது நடிப்பீர்கள்..? யாருடன் நடிப்பீர்கள்…?

தனுஷ் பதில் : நல்ல கதையும், நேரமும் அமைந்தால் சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதியுடன் நடிப்பேன்.

கேள்வி : அமிதாப்பச்சனுடன் நடித்த அனுபவம்…?

தனுஷ் பதில் : மறக்க முடியாத அனுபவம், மிகச் சிறந்த நடிகர், மீண்டும் அவருடன் நடிக்க வேண்டும்.

கேள்வி : ’ஆப்போனண்ட் ஆளே இல்ல’ என்ற பாடல் வரி சிம்புவை குறிக்கிறதா..?

தனுஷ் பதில் : அப்படி இல்லை.. அது படத்தின் கதை.. நான் அப்படி எல்லாம் கூற இயக்குநர் கே.வி.ஆனந்த் அனுமதிக்க மாட்டார்.

கேள்வி : ‘என்னை அறிந்தால்’ படம் எப்படி..?

தனுஷ் பதில் : நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ‘ஷமிதாப்’ மற்றும் ‘அனேகன்’ படத்திற்கான புரோமோஷனில் பிஷியாக இருக்கிறேன். ஆனால் தல அசத்தியிருக்கார் என்றும் படம் ஸ்டைலிஷா இருக்கு என்றும் கேள்விப்பட்டேன்.

கேள்வி : நடிகர் சூர்யாவை பற்றி..?

தனுஷ் பதில் : ஸ்டைலிஷ் நடிகர்.. கடின உழைப்பாளி.. மாஸ் படத்திற்கு வாழ்த்துகள்.

கேள்வி : அஜித்தை பற்றி…?

தனுஷ் பதில் : சிறந்த மனிதர், நான் அவரை நடிகராகவும், மனிதராகவும் மிகவும் மதிக்கிறேன்.

கேள்வி : எப்போது இயக்குனர் ஆவீர்கள்…? விஜய்யை வைத்து படம் இயக்குவீர்களா…?

தனுஷ் பதில் : எப்போது நான் இயக்குனர் ஆக தகுதியானவன் என தோன்றுகிறதோ அப்போது விஜய் அவர்களை இயக்க தயார். அவருக்கு என்னுடைய கதை பிடித்திருந்து, கால்ஷீட் கொடுத்தால் நிச்சயம் இயக்கம் செய்வேன்.

கேள்வி : விஜய் மூலமாக அனேகன் வாய்ப்பு கிடைத்தது எப்படி..?

தனுஷ் பதில் : கே.வி.ஆனந்த் விஜய்யிடன் கதை சொல்லியிருக்கிறார், அப்போது விஜய் என்னை பரிந்துரைத்திருக்கிறார்.

கேள்வி : எப்போது புதுப்பேட்டை பார்ட் – 2..?

தனுஷ் பதில் : பேசிக் கொண்டிருக்கிறோம். நல்ல கதை அமைந்தால் ஆரம்பித்துவிடுவோம்.

கேள்வி : இப்போதெல்லாம் ஏன் சில நடிகர்கள் 5 வரி டயலாக்குகளைகூட சிரமப்பட்டு பேசி நடிக்கிறார்கள்..?

தனுஷ் பதில் : இப்போதைய நடிகர்கள் அனைவருமே மிகத் திறமையான, அறிவுத் திறன் படைத்தவர்களாக இருக்கிறாகள் என்றுதான் நினைக்கிறேன்.

கேள்வி : வேலையில்லா பட்டதாரி படத்தின் 2-ம் பாகம் வருகிறதா..?

தனுஷ் பதில் : அது வேலையில்லா பட்டதாரி இல்லை. ஆனால் அதே டீமுடன் இணைந்து வேறொரு படத்தை உருவாக்க இருக்கிறோம்.

கேள்வி : ஸார்.. மலையாளப் படங்களில் நடியுங்களேன். மலையாள மக்களின் மனதில் நிச்சயம் இடம் பிடிப்பீர்கள்..

தனுஷ் பதில் : எனக்கேற்ற சரியான ஸ்கிரிப்ட் கிடைத்துவிட்டால் நிச்சயமாக நடிப்பேன்.

கேள்வி : காதல் என்றால் என்ன..?

தனுஷ் பதில் : அதுவொரு உணர்ச்சி.. மகிழ்ச்சி, வருத்தம்போல.. ஆனால் மிக உறுதியானதும் சக்தி வாய்ந்ததும்கூட..

கேள்வி : அனேகன் படத்திற்கு 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறீர்கள். இந்த அளவுக்கு படத்தின் கதை எந்த வகையில் உங்களை கவர்ந்தது..?

தனுஷ் பதில் : கமர்ஷியல் படங்களில் அதன் முழு தகுதியுடன் கூடிய கதைகள் கிடைப்பது அரிது. இதில் அது கிடைத்தது. அதுதான் என்னைக் கவர்ந்தது..

கேள்வி : உங்களுடைய அபிமான தெலுங்கு நடிகர் யார்?

தனுஷ் பதில் : பவன் கல்யாண்

கேள்வி : இயக்குநர் கே.வி.ஆனந்த் பற்றி..?

தனுஷ் பதில் : அவர் ஒரு நல்ல மனிதர். இயக்கம் நன்கு தெரிந்தவர். கமர்ஷியல் படங்களுக்கும் கிளாஸ் படங்களுக்கும் உள்ள இடைவெளியை நிரப்பத் தெரிந்தவர்.

Our Score