லண்டனை சேர்ந்த நேசன் திருநேசன் தயாரித்திருக்கும் புதிய குறும்படம் ‘சினம்’. இந்தப் படத்தில் நடிகை தன்ஷிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இயக்கம் – அனந்தமூர்த்தி, ஒளிப்பதிவு – சரவண நடராஜன், படத் தொகுப்பு – தீபக் போஜ்ராஜ், ஒலிக்கலவை – சம்பத் ஆழ்வார், கலை இயக்கம் – பாலசந்தர், கலர் – கோபால் பாலாஜி.
மேற்கு வங்காளத்தை கதைக் களமாகக் கொண்டது இந்தக் குறும்படம். ஒரு பெண் சமுகத்தில் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சனைகளை விளக்கும் குறும் படம்தான் இந்த ‘சினம்.’
தொழில் நிமித்தமாக ஒரு நாள் விலைமாது ஒருவரை சந்திக்கிறார் ஆவணப் பட பெண் இயக்குநர். அந்த பெண் அந்த தொழிலில் தள்ளப்பட்ட காரணத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு அந்த விலைமாதுவிடம் பேசுகிறார் இயக்குநர். அந்தப் பெண் சொல்லும் கதையைக் கேட்டு அதிர்ச்சியாகுகிறார் இயக்குநர்.
கதைப்படி இருவரும் பெண்னை கடவுளாக வணங்கும் மதத்தை சார்ந்தவர்கள். அண்டை மாநிலத்திலிருந்து வந்த ஒரு பெண் எவ்வாறு இந்த நிலைக்கு தள்ளப்பட்டாள் என்பதை மிக யதார்த்தமாக கூறியிருக்கிறார்களாம்.
படத்தில் விலைமாதுவாக நடிகை தன்ஷிகாவும், ஆவணப் பட இயக்குனராக பெங்காலி நடிகையான பிடிட்டா பேக்கும் நடித்துள்ளனர். 25 நிமிடங்கள் மட்டுமே ஒடக் கூடிய இந்த குறும் படத்தின் பின் பணியாக்க வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.