full screen background image

சுந்தர்.சி. நாயகனாக நடிக்கும் பேயில்லாத பேய்ப் படம் ‘இருட்டு’..!

சுந்தர்.சி. நாயகனாக நடிக்கும் பேயில்லாத பேய்ப் படம் ‘இருட்டு’..!

ஸ்கிரீன் சீன் மீடியா எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘இருட்டு’.

இந்தப் படத்தில் பிரபல இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி நாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக தன்ஷிகா, சாக்சி பர்வீந்தர் இருவரும் நடிக்கவுள்ளனர். மேலும், V.T.V.கணேஷ், யோகிபாபு ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். 

இசை – கிரிஷ் கோபாலகிருஷ்ணன், ஒளிப்பதிவு – E.கிருஷ்ணசாமி, படத் தொகுப்பு R.சுதர்ஷன், கலை இயக்கம் – A.K.முத்து, ஸ்டில்ஸ் – சாரதி, டிசைன்ஸ் – விருமாண்டி, நிர்வாக தயாரிப்பு – A.P.V.மாறன்.

IRUTTU 2nd look

‘முகவரி’, ‘நேபாளி’, ‘தொட்டி ஜெயா’, ‘6 மெழுகுவர்த்திகள்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் V.Z.துரை இப்படத்தை இயக்கியுள்ளார். 

படம் பற்றி இயக்குநர் V.Z.துரை பேசும்போது, “இதுவொரு புதுமையான ஹாரர் படம். அதே சமயம் பேயே இல்லாத ஹாரர் படம். எனக்கு இந்த ஜர்னரில் ஒரு படம் செய்ய வேண்டும் என்று ஆசை. அதை நான் இப்படத்தில் சரியாக செய்துள்ளேன் என்று நினைக்கிறேன்…” என்றார். 

படத்தின் 85 சதவிகித படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில்  ஊட்டியில் நடைபெற்றது. இன்னும் சில காட்சிகள் ஹைராபாத் மற்றும் சூரத்தில் படமாக்கப்படவுள்ளன.

Our Score