full screen background image

சிம்புதேவன் இயக்கிய ஆந்தாலஜி திரைப்படம் ‘கசட தபற’

சிம்புதேவன் இயக்கிய ஆந்தாலஜி திரைப்படம் ‘கசட தபற’

இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கசட தற’  என்ற ஆந்தலாஜி திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது.

ஓடிடி பிளாட்பார்ம்கள் அதிகமான பின்பு, ஆந்தாலஜி  வகையான திரைப்படங்களின் வருகை தமிழ்த் திரையுலகில் அதிகமாகிவிட்டது.

சுதா கொங்கரா, கார்த்திக் சுப்புராஜ், சுகாசினி, ராஜீவ் மேனன், கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற முன்னணி இயக்குநர்களின் கூட்டணியில் புத்தம் புது காலை’ என்ற ஆந்தாலஜி படம் முதன்முதலாக ஓடிடி தளத்தில் வெளிவந்தது.

அதன் பின்னர் வெற்றி மாறன், விக்னேஷ் சிவன், சுதா கொங்கரா, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘பாவக் கதைகள்’ என்ற மற்றொரு ஆந்தாலஜி படமும் ஓடிடி தளத்தில் வெளிவந்தது. 

சமீபத்தில் நவரசா’ என்ற தலைப்பில் ஒன்பது இயக்குனர்கள் இயக்கிய ஆந்தாலஜி படமும் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இவற்றில் புத்தம் புது காலை’ படம் மட்டும் திரையரங்கிலும் வெளியானது. மற்ற இரண்டு படங்களும் நேரடியாக ஓடிடி தளங்களில் மட்டுமே வெளிவந்துள்ளன. 

இந்த நிலைமையில் மீண்டும் ஒரு ஆந்தாலஜி திரைப்படம் சோனி லிவ்’ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. கசட தபற’ என்ற இந்தப் படத்தை இயக்குநர் சிம்புதேவன் இயக்கியுள்ளார்.

இவர் ஏற்கெனவே ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’, ‘அறை எண் 351-ல் கடவுள்’, ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’, ஒரு கன்னியும் 3 களவாணிகளும்’, ‘புலி’ ஆகிய படங்களை இயக்கியவர்.

இயக்குர் வெங்கட் பிரபுவும், தயாரிப்பாளர் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரனும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

6 கதைகளைக் கொண்ட இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண், சந்தீப் கிஷன், ரெஜினா, பிரியா பவானி ஷங்கர், விஜயலட்சுமி, வெங்க பிரபு, பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

சந்தோஷ் நாராயணன், சி.எஸ்.சாம், யுவன் ஷங்கர் ராஜா, ஜிப்ரான், ஷான் ரோல்டன், பிரேம்ஜி அமரன் ஆகியோர் இசையமைத்துள்ளனர். 

தற்போது இந்த ‘கசட தபற’ ஆந்தாலஜி திரைப்படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான வெங்கட் பிரபு.

Our Score