பாவம் சிம்பு.. காதலுக்கும் அவருக்கும் ரியல் லைஃபில் மட்டும் ராசியில்லை போலிருக்கிறது. கிட்டத்தட்ட 30 நாட்கள் கழித்து காதலுக்கு கருமாதி கொண்டாடிவிட்டு, இன்றைக்குத்தான் அதை வெளியில் சொல்லியிருக்கிறார்..
காதலர்கள் தினத்தன்றே பார்க்காமல், கொள்ளாமல், பேசாமல்.. டிவீட் செய்யாமல் இருக்கும்போதே சந்தேகம் பூ பூத்தது.. அன்றைக்கு மதிய நேரத்தில் ஹன்சிகா செய்த ஒரு ட்வீட் சிம்புவை கெட் அவுட்டாக்கிவிட்டதை உறுதிப்படுத்தியது.
இதன் பின்பும் மனிதர் தனது காதல் இன்னமும் வாழ்வதாக ட்வீட் செய்து கொண்டேயிருந்தார். பின்னாடியே போய் கெஞ்சி, கூத்தாடி, காலில் விழுந்து காதலை வாழ வைக்க இதென்ன சினிமாவா..? ரியல் லைஃபாச்சே..? சரி… குடும்ப நிகழ்ச்சிக்கே வராதவர்களை குடும்பத்திற்குள் இழுத்து என்ன புண்ணியம்..? நாமளும் நம்ம வழியை பார்ப்போம்ன்னு நினைச்சு இன்றைக்கு மதியம் 2 மணிக்கு முன்னோட்டமாக ஒரு செய்தியை ட்வீட் செய்தார் சிம்பு. “இன்னும் சில மணித்துளிகளில் ஒரு முக்கியமான விஷயம் உங்களை வந்தடையும்..” என்றார். யூகித்தனர் மீடியாக்கள். அதேபோல வந்தது 3 மணிக்கு..
STR Press Release
STR in his statement to the media today declared that he has severed his relationship with Hansika.
‘I had gone through enough in this relationship, and after much of thoughts invested into this i here by declare that i am single now, and i have nothing to do what so ever with Hansika, and it is all the story of the past. I don’t regret the past nor i am in a mood to discuss over the facts which had forced me to this discussion . This announcement is also made only to give clarity to my friends, associates, and my fans over my status. As of now, i am concentrating on my career… and need less to say i am happy and relieved too!!!
யாரெல்லாம் சிம்புவின் நண்பர்களோ, நெருக்கமானவர்களோ.. அவருடைய ரசிகர்களோ.. உங்களுக்குத்தான் இந்தத் தகவல்..! கடைசியாக எல்லா காதலர்களும் பிரேக்கப்பில் சொல்கின்ற வார்த்தையைத்தான் சொல்லியிருக்கிறார். “நான் இனிமேல் எனது கேரியரில்தான் கவனம் செலுத்துப் போகிறேன்..” என்று..!
அதென்ன கேரியர்..? நடிப்பு கேரியரா…? அல்லது காதல் கேரியரா..? விடு மச்சி.. ஹன்சிகா போனா நயன்தாரா.. அவ்ளோதான்..