full screen background image

கமல்ஹாசன் பற்றிய ‘அபூர்வ நாயகன்’ புத்தக வெளியீடு

கமல்ஹாசன் பற்றிய ‘அபூர்வ நாயகன்’ புத்தக வெளியீடு

இந்தியச் சினிமாவின் தனித்த அடையாளமாகத் திகழும் உலக நாயகன் கமல்ஹாசன் பற்றிய ‘அபூர்வ நாயகன்’ என்ற புத்தகம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இன்று காலை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் அலுவலகத்தில் திரு.கே.ஆர்.நாகராஜன் இப்புத்தகத்தை வெளியிட, நடிகர் கமல்ஹாசன் பெற்றுக் கொண்டார். கமல்ஹாசன் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகள் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

_H8E9515

ராமராஜ் காட்டன் நிறுவனத்தின் தலைவர் கே.ஆர்.நாகராஜன்தான் இந்தப் புத்தகத்தின் உருவாக்கத்திற்குக் காரணமாக இருந்திருக்கிறார். இந்தப் புத்தகத்தில் கமல்ஹாசனின் சில அரிய புகைப்படங்களும், அவர் நடித்த படங்களின் இதுவரையிலும் வெளிவராத புகைப்படங்களும் இடம் பெற்றிருக்கின்றன. கூடவே தமிழ்க் கவிஞர்கள் கமல்ஹாசனின் திரையுலக வாழ்க்கை பற்றி எழுதியிருக்கும் கவிதைகளும் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. கமல்ஹாசனின் திரையுலகப் பயணத்தின் அனைத்து புள்ளி விபரங்களும் கூடுதல் தகவல்களாக இதில் இடம் பெற்றுள்ளது இதன் தனிச் சிறப்பாகும்.

உலக அரங்கில் தமிழ்த் திரையை தலைநிமிரச் செய்த கலைஞானி கமல்ஹாசனின் சாதனைகள் குறித்த பெட்டகமாகத் திகழும் இந்தப் புத்தகம், நிகழ்காலத்தில் மட்டுமல்ல.. வரும் காலத்திலும் ஒரு சரித்திர சாட்சியாக இருக்கும்..

“1960-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் சிறு பையனாக நுழைந்து இன்றுவரையிலும தனது கடின உழைப்பால், விடா முயற்சியால், வித்தியாசமான சிந்தனையால் தமிழ்ச் சினிமாவின் புகழை உயர்த்தியிருக்கும் கமல்ஹாசனுக்கு ராமராஜ் காட்டன் நிறுவனம் செய்திருக்கும் ஒரு சிறிய சமர்ப்பணம் இது…” என்று அடக்கத்துடன் சொல்கிறார் திரு.கே.ஆர்.நாகராஜன்.

நிச்சயம் இதுவொரு மிகப் பெரிய சமர்ப்பணம் ஸார்..! கலைஞானிக்கு இன்னும் எத்தனை எத்தனை மகுடம் சூட்டினாலும் தகும்..!

Our Score