பாராட்டுக்களைப் பெற்றிருக்கும் ‘சில்லு கருப்பட்டி’ படத்தின் பாடல்..!

பாராட்டுக்களைப் பெற்றிருக்கும் ‘சில்லு கருப்பட்டி’ படத்தின் பாடல்..!

தயாரிப்பாளர் வெங்கடேஷ் வெலினேனி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘சில்லு கருப்பட்டி’

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, சுனைனா, லீலா சாம்சன், சாரா அர்ஜுன், மணிகண்டன் மற்றும் சில பிரபலங்களும் நடித்திருக்கிறார்கள்.

நகர்ப்புற பின்னணிகளைக் கொண்ட நான்கு அழகான காதல் கதைகளை கொண்ட ஒரு தொகுப்புதான் இந்த ‘சில்லு கருப்பட்டி’ திரைப்படம்.

சமீபத்தில் இந்த ‘சில்லு கருப்பட்டி’ படத்தின் ‘அகம் தானாய் அறிகிறதே, அறிமுகம் இனி எதற்கு’ என்ற பாடல் வெளியாகி மிக அதிக பார்வைகளைப் பெற்றிருக்கிறது.

‘கண்ணம்மா’, ‘மாயநதி’, ‘ஆகாயம் தீப்பிடிச்சா’, ‘ஆகாசத்த நான் பாக்குறன்’, ‘மோகத்திரை’ மற்றும் பல பாடல்களை பாடி புகழ் பெற்ற பிரபல பின்னணிப் பாடகர் பிரதீப் குமார்தான், இயக்குநர் ஹலிதா ஷமீம் எழுதிய இந்தப் பாடலையும் பாடியிருக்கிறார். 

தெய்வீகமான காதலின் ஆழத்தை இந்தப் பாடல் மிக அழகாக வெளிப்படுத்துகிறது என்கிறார்கள் இந்தப் பாடலை ரசித்த இசை ரசிகர்கள்.

வெளியான ஒரேயொரு பாடலுக்கு கிடைத்துள்ள அபரிமிதமான வரவேற்பை பற்றி படத்தின் இயக்குநர் ஹலிதா ஷமீம் கூறும்போது, “இசையமைப்பாளர் பிரதீப்குமார் முதன்முதலில் இந்த டியூனை போட்டுக் காட்டியபோது, ஒவ்வொரு இசைக் குறிப்பிலும் காதலின் சாராம்சம் இருந்ததை உணர முடிந்தது. அவரது குரலின் மூலம் மயக்கும் காதல் பாடல்களை நமக்கு வழங்கிய அவர், இந்த ‘சில்லு கருப்பட்டி’ படத்தின் இசையிலும் காதலை அள்ளி தெளித்திருக்கிறார் என்பதில் மகிழ்ச்சி…” என்கிறார். 

Our Score