ஜெய்-பானு நடிக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’ திரைப்படம்..!

ஜெய்-பானு நடிக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’ திரைப்படம்..!

‘பிரேக்கிங் நியூஸ்’ என்ற புதிய தமிழ்த் திரைப்படம் இன்று காலை AVM ஸ்டூடியோவில் பூஜையுடன் துவங்கியது.  

ராகுல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் கே.திருக்கடல் உதயம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

படத்தில் நடிகர் ஜெய் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமான பானு அறிமுகமாக உள்ளார். மேலும் இப்படத்தில் தேவ்கில், ‘வேதாளம்’ வில்லன் ராகுல் தேவ், மந்திரா பேடி, இஷா கோபிகா, பழ.கருப்பையா, ராதாரவி, கிருதுவாரகீஷ் ஆகியோரும் நடிக்கவுள்ளனர்.

ஒளிப்பதிவு – ஜானி லால், இசை – விஷால் பீட்டர், கலை இயக்கம் – மகேஷ் N.M., சண்டை இயக்கம் – ஸ்டன்னர் சாம், நடன இயக்கம் – ராதிகா, VFX சூப்பர்வைசர் – தினேஷ் குமார்.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் படங்களில் கிராபிக்ஸ் வல்லுநராகப் பணியாற்றிய ஆண்ட்ரூ பாண்டியன் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.

தமிழ் சினிமா வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக புதிய தொழில் நுட்பத்துடன் 90 நிமிடங்கள் விஷூவல் எஃபெக்டில் இப்படத்தின் காட்சிகள் உருவாக உள்ளது. 

சமூகத்தில் நடக்கும் அநீதிகள், பிரச்சனைகள், சமீபத்தில் காஷ்மீரில் நடைபெற்ற புல்வாயா குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இத்திரைப்படம் உருவாகவுள்ளது. சமூக நோக்கோடு சிந்திக்கும் ஒரு சாமானிய இளைஞன் அதனால் சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றி இத்திரைப்படம் பேசவிருக்கிறது.

இத்திரைப்படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை ஏவி.எம். ஸ்டூடியோவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் பங்கு பெறும் நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Our Score