full screen background image

ஸ்டண்ட் மாஸ்டர் ஜோதி இயக்கும் சிலம்பம் விளையாட்டு பற்றிய ‘சிலம்பம்’ படம்..!

ஸ்டண்ட் மாஸ்டர் ஜோதி இயக்கும் சிலம்பம் விளையாட்டு பற்றிய ‘சிலம்பம்’ படம்..!

லார்டு கணேஷ் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் திருமதி.எஸ்.லதா தயாரித்துள்ள படம் சிலம்பம்.’

ந்தப் படத்தில் புதுமுகங்கள் மாஸ்டர் எம்.எஸ்.சஷாந்த், ஜெ.அஜீத், மாஸ்டர் அரிமா வர்மன், பவித்ரா, மற்றும் மொட்டை’ ராஜேந்திரன், தீனா, ‘மகாநதி’ சங்கர், முத்துக்காளை, வெங்கல்ராவ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இசை – ஸ்ரீகாந்த் தேவா, ஒளிப்பதிவு – ஷ்யாம்ராஜ், படத் தொகுப்பு – கே.என்.செந்தில், தயாரிப்பு நிர்வாகம் – தாடி கோவிந்தராஜ், பத்திரிகை தொடர்பு – விஜய முரளி.  

பல வெற்றிப் படங்களில் சண்டை பயிற்சி இயக்குநராகப் பணிபுரிந்து அனுபவம் பெற்ற டாக்டர். ஏ.கே.எஸ்.ஜோதி இந்தப் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி சண்டைப் பயிற்சி இயக்கத்தையும் செய்து இந்தப் படத்தையும் இயக்குகிறார். இது இவர் இயக்கும் முதல் படமாகும்.

விளையாட்டு துறையில் திறமையானவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை தட்டி பறித்து திறமையில்லாதவர்களை புகுத்தி ஒரு கும்பல் ஆட்டி வைத்துக் கொண்டிருப்பது நமக்கு தெரிந்ததுதான். இவர்களை எதிர்த்து விளையாட்டு துறையில் சாதிப்பது திறமைசாலிகளுக்கு குதிரை கொம்பாகவே இருந்து வருகிறது.

இந்த சூழ்நிலை சிலம்ப விளையாட்டிலும் துழைந்துள்ளதை எதிர்த்து வசதியற்ற குடும்பத்தை சேர்ந்த அந்த இளைஞன் சிலம்பத்தை முறையாக கற்றுக் கொண்டு பண பலம், அதிகார பலத்தை எதிர்த்து சிலம்ப விளையாட்டில் மாவட்ட அளவில் மட்டுமல்ல, மாநில அளவில் மட்டுமல்ல, தேசிய அளவில் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி தங்கப் பதக்கங்களை அள்ளுகிறான்.

ந்த இளைஞனின் விடாமுயற்சியை படத்தின் மையக் கருவாக வைத்து, உண்மை சம்பவங்களை திரைக்கதையாக்கி இந்த சிலம்பம் படம் தயாராகவுள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது..!

Our Score