full screen background image

சரத்குமார், கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படம்..!

சரத்குமார், கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படம்..!

Big Print Pictures நிறுவனம், Tripura Creations நிறுவனம் மற்றும் Tauras Cinecorp ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து தமிழில் புதிய படமொன்றை தயாரிக்கின்றன.

Big Print Pictures நிறுவனத்தின் தயாரிப்பாளரான I.B.கார்த்திகேயன் தயாரிப்பில், ஆதி பினிசெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் நாசர் நடிப்பில், மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசையமைப்பில் பிருதிவி ஆதித்யாவின் இயக்கத்தில் உருவாகி, சமீபத்தில் SONY LIV தளத்தில் வெளியான கிளாப்’, படம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்த Big Print Pictures நிறுவனத்துடன் தற்போது கை கோர்த்துள்ள Tripura Creations நிறுவனம் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் புகழ் பெற்ற பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமாகும்.

இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளரான முரளி கிருஷ்ணா வங்கயாலபதி தெலுங்கு திரையுலகில் பல படங்களுக்கு பைனான்ஸ் செய்தவர். தற்போது இவருடைய Tripura Creations நிறுவனம் டாக்டர் ராஜசேகர் நடித்து வரும் சேகர்’ படத்தைத் தயாரித்து வருகிறது.

Tauras Cinecorp நிறுவனத்தின் தயாரிப்பாளரான வெங்கட ஸ்ரீனிவாஸ் பொக்ரம் தெலுங்கில் கார்த்திகேயா’, ‘காதலோ ராஜகுமாரி’ போன்ற பல குறிப்பிடத்தக்க படங்களைத் தயாரித்தவர். தற்போது தமிழில் சரண்யா பொன்வண்ணன் மற்றும் ராஜ் வர்மா நடிப்பில் ‘கேங்க்ஸ்டர் கிரானி’ படத்தைத் தயாரித்து வருகிறார்.

Big Print Pictures, Tripura Creations & Tauras Cinecorp ஆகிய மூன்று நிறுவனங்களும் தமிழ் மற்றும் தெலுங்கில், அடுத்தடுத்து பெரிய பட்ஜெட்டில் பல நல்ல  திரைப்படங்களை தயாரிக்கவுள்ளன,

அதில் முதலாவதாக புரொடக்சன் நம்பர்: 9 என்று குறிப்பிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடிகர்கள் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இருவரும் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். இது மிகப் பெரிய பட்ஜெட்டில் மதுரை பின்னணியில் ஆக்‌சன், க்ரைம், த்ரில்லர் டைப்பில் உருவாகவுள்ளது.  

இப்படத்தை தட்சிணாமூர்த்தி ராமர் இயக்குகிறார். ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார், சாம் C.S. இசையமைக்கிறார்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் தட்சிணாமூர்த்தி ராமர் பேசும்போது, “கௌதம் கார்த்திக், சரத்குமார் சார் போன்ற அர்ப்பணிப்புள்ள நடிகர்களுடன் பணியாற்றுவது எனது கனவு நனவான தருணம். அவர்களின் பேரார்வமும் அர்ப்பணிப்புமிக்க திறமையும் கலந்த நடிப்பில், சினிமா அரங்குகள் கூஸ்பம்ப்ஸ் தருணங்களால் நிரம்பி வழியும் என்று நான் நம்புகிறேன்.

திரையுலகில் சரத் சாரை ரசித்து வளர்ந்த நான், அவருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கவே இல்லை. நான் குறிப்பிட்ட கதாபாத்திரத்தை எழுதும்போதுகூட, சரத் சாரை மனதில் வைத்திருந்தேன், ஆனால், அவர் என் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாரா என்று உறுதியாக தெரியவில்லை. கதையை விவரித்தவுடனே படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு ஆச்சர்யத்தைக் கொடுத்தார்.

இதுவரையிலும் சரத் சார் தனது படங்களில் நேர்மையான போலீஸ் வேடத்தில் நடித்ததை பார்த்திருக்கிறோம், ஆனால், இந்தப் படத்தில் அவர் மதுரையில் வாழும் ஒரு போலீஸ் அதிகாரியாக மதுரை வட்டார வழக்கு மொழியுடனும், உடல் மொழியுடனும் அவரது முந்தைய பாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட பாத்திரமாக நடிக்கவுள்ளார்..” என்றார்.

இந்த மாதமே இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

Our Score