full screen background image

‘இஸ்பேட் ராணி’ ஷில்பா மஞ்சுநாத்-நட்டி நட்ராஜ் நடிக்கும் புதிய படம்

‘இஸ்பேட் ராணி’ ஷில்பா மஞ்சுநாத்-நட்டி நட்ராஜ் நடிக்கும் புதிய படம்

‘வேலன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.எம்.முனிவேலன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் நட்டி நாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தில் ‘காளி’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படங்களில் நாயகியாக நடித்த ஷில்பா மஞ்சுநாத் முதன்மை நாயகியாக நடிக்கிறார்.

படத்தின் முக்கிய வேடங்களில் ‘பிளாக் ஷீப்’ நந்தினி, பாரதா நாயுடு மற்றும் ப்ரீத்தி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார். கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத் தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார். கலை இயக்குநர் பொறுப்பை அருண் ஏற்க, இந்தப் படத்தின் நடன இயக்குநராக சாண்டி மாஸ்டர் பணியாற்றுகிறார். ஆடை வடிவமைப்பு – டோரத்தி ஜெய், நிர்வாக தயாரிப்பு – நசீர் & கே.எஸ்.கே செல்வா.

சைக்கோ திரில்லர் டைப்பிலான இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் ஹாரூன் இயக்குகிறார்.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

 
Our Score