தோனியின் சந்திப்பால் விஜய்-அஜீத் ரசிகர்கள் கடும் மோதல்..!

தோனியின் சந்திப்பால் விஜய்-அஜீத் ரசிகர்கள் கடும் மோதல்..!

நடிகர் விஜய்யை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வீரருமான தோனி இன்று சந்தித்துப் பேசினார்.

நடிகர் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் ‘கோகுலம் ஸ்டூடியோ’வில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஷூட்டிங்கில் விஜய்யுடன் யோகிபாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இந்த நேரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, இன்று இந்த ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்தார்.

அங்கே அவர் நடிகர் விஜய்யை சந்தித்துப் பேசியிருக்கிறார். சந்திப்பு முடிந்த பிறகு தோனியை விஜய் கார்வரையிலும் அழைத்துச் சென்று வழியனுப்பி வைத்திருக்கிறார்.

இந்தச் சந்திப்பு எதற்காக என்று தெரியவில்லை. மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றால் இப்போது எதற்கு என்ற கேள்வியும் எழுகிறது. விரைவில் இதன் காரணம் தெரிய வரலாம்..! 

ஆனால் இப்போது இதுவல்ல பிரச்சினை.. இந்தச் சந்திப்பு முடிந்ததும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட செய்திகளில் தல தோனி தளபதி விஜய்யை சந்தித்தார் என்று விஜய் ரசிகர்கள் செய்திகளைப் புரப்புரை செய்தார்கள்.

இந்தச் செய்திகளில் தல தோனி என்பதை டேக் செய்து அதை வைரலாக்கினார்கள். அவ்வளவுதான். அஜீத்தின் ரசிகர்கள் கோபம் கொண்டுவிட்டார்கள். அது யாருடா தல.. இந்தியாவிலேயே தலன்னா அது அஜீத்துதான் அவர்தான் ஒரே தல என்று பொங்கித் தீர்த்துவிட்டார்கள்.

இதையடுத்து விஜய் ரசிகர்கள் தலதோனி என்றும், அஜீத் ரசிகர்கள் ஒரேதல என்றும் டேக்குகளை அள்ளி வீச, இரண்டுமே வைரலாகிக் கொண்டே சென்று கடைசியில் ஆபாச அர்ச்சனைகளில் வந்து முடிந்திருக்கிறது.

இந்த இரண்டு ரசிகர்களின் சண்டை என்றைக்கு முடியுமோ..?

Thalapathy Vijay
Thalapathy Vijay
Thalapathy Vijay
Thalapathy Vijay
Thalapathy Vijay
Our Score