full screen background image

படத் தயாரிப்பில் நிறைய நஷ்டப்பட்டுட்டேன் – இயக்குநர் ஷங்கர் பேட்டி..!

படத் தயாரிப்பில் நிறைய நஷ்டப்பட்டுட்டேன் – இயக்குநர் ஷங்கர் பேட்டி..!

எப்போதும்போல் நேற்றைக்கு ‘குமுதம்’. இன்றைக்கு ‘ஆனந்தவிகடனில்’ இயக்குநர் ஷங்கரின் பேட்டி..!

‘ஐ’ படத்தைத் தவிர இப்போது வெளியாகியிருக்கின்ற சில படங்கள் தன்னை பாதித்திருப்பதையும், தன்னுடைய ‘எஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் பற்றியும் இதில் சொல்லியிருக்கிறார் ஷங்கர்..

“எஸ் பிக்சர்ஸ்’ ஆரம்பிச்சப்ப நான் பண்ண நினைச்ச படங்களின் வரிசையில் செட்டாகி இருந்த படம் ‘மூடர் கூடம்.’ ரொம்ப நல்லா இருந்தது. இம்ப்ரெஸிவ், இன்டலிஜென்ட், காமெடின்னு ஒவ்வொரு சீன்லயும் யோசிக்க வைச்சார் நவீன். புத்திசாலித்தனமான முயற்சி. 

‘இந்தப் படத்தை நாம தயாரிச்சிருக்கணுமே’னு நினைக்க வைச்ச படங்கள், ‘மூடர்கூடம்’, ‘சூது கவ்வும்’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’. இந்த மாதிரியான படங்கள்தான் சினிமாவுக்கு ஆக்சிஜன்!”

”தயாரிப்பு வேலைகளைப் பார்த்துக்க எனக்கு சரியான ஆள் வேணும். அப்படி சரியான ஆள் அமையலைன்னா, அதையும் நான்தான் பார்த்துக்கணும். ‘எந்திரன்’ படத்துக்கு அவ்வளவு உழைச்சேன். அந்த உழைப்புக்கு நடுவுல என் நேரத்தைத் திருடித்தான் ‘எஸ் பிக்சர்ஸ்’க்குக் கொடுத்தேன்.

ஆனா, இப்போ அந்த நேரத்துலயும் ‘ஐ’ வேலைகள் குவிஞ்சு கிடக்கிறதால, தயாரிப்பைக் கவனிக்க முடியலை. ‘எஸ் பிக்சர்ஸ்’க்காக நான் கேட்டதில் ராஜு முருகன் சொன்ன ‘குக்கூ’ கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. அந்தப் படத்தை நான்தான் தயாரிச்சிருக்கணும். ஆனா, ‘ஐ’ வேலைகள் என்னை மொத்தமா அமுக்கிருச்சு.

இன்னொரு விஷயம்… படத் தயாரிப்பில் எனக்குப் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. ‘இவருக்கென்ன கஷ்டம்?’னு உங்களுக்குத் தோணும். ‘சின்னச் சின்ன அலட்சியங்கள் எல்லாம் சேர்ந்து மெகா அலட்சியமாயிடுது’னு ‘அந்நியன்’ல ஒரு வசனம் வரும். அந்த மாதிரி சின்னச் சின்ன நஷ்டங்கள் சேர்ந்து மெகா நஷ்டமாயிடுச்சு. அந்த நஷ்டத்தைச் சமாளிக்க ரொம்பவே தடுமாறிட்டேன். ஆனாலும், நல்ல படங்களைத் தயாரிக்கும் ஆசை இன்னும் இருக்கு. அழகான, அர்த்தமுள்ள விஷயங்கள் பண்ணலாம்!”

ஷங்கர் மீண்டும் தன்னுடைய எஸ் பிக்சர்ஸை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறாராம். ‘கப்பல்’ படத்தை தன்னுடைய நிறுவனம் சார்பாக வாங்கி வெளியிடப் போகிறாராம்.. இதில் இருந்து மீண்டும் ‘எஸ் பிக்சர்ஸ்’ தன்னுடைய  அடுத்த ரவுண்டை துவக்குகிறது.

நல்வாழ்த்துகள் ஷங்கர் ஸாருக்கு..!

Our Score