எட்டு வயது பெண் குழந்தைதான் படத்தின் ஹீரோயின்..!

எட்டு வயது பெண் குழந்தைதான் படத்தின் ஹீரோயின்..!

குழந்தையை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டிருக்கும் ‘டெய்ஸி’ தமிழ்ப் படம் கடைசிக்கட்ட பணிகளில் தயாராகிக் கொண்டிருக்கிறது.

என்.சண்முகசுந்தரம் மற்றும் முகமது யாசின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கி வரும் திகில் படம் ‘டெய்ஸி’.

இந்தப் படத்தில் தீபக் பரமேஷ், குணாளன் மோர்கன், ஜாக்குலின் பிரகாஷ், மெளர்மா அனீதா, கோபி ஆகியோர் நடித்திருக்கின்றனர். மணீஷ் மூர்த்தி ஒளிப்பதிவு செய்ய.. சிவசரவணன் இசையமைத்திருக்கிறார். ஹேரி ஹரன் படத்தொகுப்பு பணியைச் செய்திருக்கிறார். சி.எம்.மோகன் பாபு கலை இயக்கம் செய்திருக்கிறார். நிகில் பி.ஆர்.ஓ. பணியைச் செய்திருக்கிறார். எழுதி, இயக்கியிருக்கிறார் ஸ்ரீநாத் ராமலிங்கம்.

ஸ்ரீநாத் ராமலிங்கம் ஹாலிவுட்டில் கலை இயக்குநராகப் பணியாற்றியவர். சிங்கப்பூரில் சில டிவி சீரியல்களை இயக்கிய அனுபவம் உள்ளவர். 2014-ம் ஆண்டு சென்னையில் நடந்த லிப்ரா குளோபல் பிலிம் பெஸ்டிவலில் சிறந்த குறும்பட இயக்குநருக்கான பரிசையும் வென்றவர்.

கடந்த மூன்றாண்டுகளாக கோடம்பாக்கத்தில் கால் பதித்து ஒரு படத்தை இயக்கி சிறந்த இயக்குநராக பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக கடுமையான முயற்சிகளை மேற்கொண்டவரின் கனவு இந்தாண்டுதான் நனவாகப் போகிறது.

இவர் இயக்கும் இந்த ‘டெய்ஸி’ திரைப்படம்  8 வயது பெண் குழந்தையை மையமாக்க் கொண்டது. இன்றைய சமூகத்திற்குத் தேவையான ஒரு சமூகப் பொறுப்புள்ள விஷயத்தை படத்தில் சொல்லவிருக்கிறார்களாம்.

“இந்தப் படத்தின் தயாரிப்பின்போது பல்வேறுவிதமான பிரச்சினைகளையும், அனுபவங்களையும் சந்தித்தேன். ஆனாலும் அதையெல்லாம் கடந்து மிகுந்த மனமகிழ்ச்சியோடு இந்தப் படத்தை இயக்கி முடித்திருக்கிறேன். படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த தீபக் பரமேஷின் தந்தை ஷூட்டிங்கின்போதுதான் காலமானார். அந்தச் சோகத்தையும் தாங்கிக் கொண்டு சில நாட்களில் கேமிரா முன்பாக வந்து நின்றுவிட்டார் தீபக். இதுபோல நடித்தவர்களின் அர்ப்பணிப்பும், பெப்ஸி ஊழியர்களின் ஒத்துழைப்பினாலும்தான் இந்த படத்தை சீக்கிரமாக முடிக்க முடிந்தது…” என்கிறார் இயக்குநர்  ஸ்ரீநாத் ராமலிங்கம்.

Our Score