விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை பற்றி பேசவில்லையென்றால், அவர் சீமானாகவே இருக்க முடியாதே..? இன்றைக்கு ‘சிநேகாவின் காதலர்கள்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் பேசிவிட்டார்..
“இங்க உக்காந்திருக்கிற தயாரிப்பாளர் டி.சிவாவுக்கு நான் ஒரு பெரிய துரோகம் பண்ணிட்டேன். அது இப்போவரைக்கும் எனக்கு குற்றவுணர்ச்சியா இருக்கு. அவர் முதல்ல ‘பகலவன்’ கதையைத்தான் படமா எடுக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினாரு. அதை எடுத்திருந்தா அதுவொரு வெற்றிப் படமா அமைஞ்சிருக்கும். தொடர்ச்சியா நான் சில படங்களை இயக்கியிருந்திருக்கலாம். அன்னிக்கு ‘வாழ்த்துகள்’ படத்தை எடுத்து, அவருக்கு பெரிய பொருள் இழப்பை நான் தந்திட்டேன்..
அந்தப் படம் ரிலீஸான சமயத்துல, ஒரு வாரத்துல என் தலைவன் பிரபாகரன்கிட்டேயிருந்து எனக்கு அவசர அழைப்பு. நான் போனேன். அங்க போன அந்த நாள்ல இருந்து எனது வாழ்க்கை திசை மாறிவிட்டது. நான் அங்க இருக்கும்போதுதான் ‘வாழ்த்துகள்’ படம் ஓடிக்கிட்டிருந்தது. அது வெற்றியடைலைன்னு என் தலைவருக்கு தெரிஞ்சிட்டது.
என்னைக் கூப்பிட்டுச் சொ்ன்னாரு.. ‘நமக்கெதுக்கு இந்தப் புதுக்கவிதையெல்லாம்.? நமக்கெதுக்கு..?’ நான் தலையைக் குனிஞ்சுக்கிட்டிருந்தேன். ‘நமக்கு தம்பி மாதிரி படம் இருக்கணும். தரையிலயும் அடிக்கணும்.. திரையிலயும் அடிக்கணும்.. அப்போதான் விடுதலை வரும்ன்னு சொன்னாரு. நான் சரிங்கண்ணேன்..” என்றார்..
அதான் தலைவரே சொல்லீட்டாரேண்ணே..! தம்பி இரண்டாம் பாகத்தை சீக்கிரம் ஆரம்பிங்க..! பார்த்திருவோம்..!