‘சவரக்கத்தி’ படத்தின் டீஸர் வெளியீட்டு விழா..!

‘சவரக்கத்தி’ படத்தின் டீஸர் வெளியீட்டு விழா..!

இயக்குநர் மிஷ்கினின் ‘Lone Wolf Production’ நிறுவனம் தயாரித்துள்ள சவரக்கத்தி படத்தின் டீஸர் வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் படத்தின் இயக்குநர் G.R. ஆதித்யா, படத்தின் நாயகனும், இயக்குநருமான ராம், நாயகி பூர்ணா, நடிகர் நாசர், தயாரிப்பாளர் மிஷ்கின், ஒளிப்பதிவாளர் வி.ஐ. கார்த்திக், இசையமைப்பாளர் அரோல் குரோலி, படத் தொகுப்பாளர் கோபிநாத், இயக்குநர்கள் சசி, பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் பவா செல்லத்துரை, ஓவியர் மருது, நடிகர் ஸ்ரீ, இயக்குநர் ரஞ்சித், நடிகர் பிரசன்னா, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இயக்குநர் கே.பாக்யராஜ், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.