full screen background image

இன்னமும் வெளியாகாத ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் தெலுங்கு உரிமம் விற்பனை..!

இன்னமும் வெளியாகாத ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் தெலுங்கு உரிமம் விற்பனை..!

சந்தானம் ஹீரோவாக நடித்து வெளிவரவுள்ள ‘சர்வர் சுந்தர’த்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டு தமிழ் சினிமா துறையிலும்  மக்கள் மத்தியிலும் பெரும்  வரவேற்பை பெற்றது. இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு பெருமளவு உயர்ந்துள்ளது.

ஆதலால் இப்படத்தின் உரிமத்தை பெற அண்டை மாநிலங்களிலும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் சர்வர் சுந்தரம் தெலுங்கு உரிமத்தை ‘லிங்க பைரவி கிரியேஷன்ஸ்’ பெற்றுள்ளது. 

“எல்லா மொழி மக்களும் ரசித்து மகிழும்படியான படம் ‘சர்வர் சுந்தரம்’. அதன் கதை அப்படி. அத்தியாவசிய விஷயமான  உணவையும், சமையலையும்  பற்றிய கதை என்பதால் இது அனைவராலும் கொண்டாடப்படும்.

மிகப் பெரிய அளவில் ரிலீஸ் செய்யப்படவிருக்கும் இந்தப் படம் சந்தானத்தின் ஹீரோ அந்தஸ்தை வர்த்தக ரீதியாக  மேலும் உயர்த்தும் என உறுதியாக நம்புகிறேன்..” என்கிறார் இப்படத்தை தயாரித்த ‘கெனன்யா பிலிம்ஸ்’ ஜே.செல்வகுமார்.

Our Score