ஸ்ரீபுவால் மூவி புரொடக்ஷன்ஸ் மற்றும் ‘ஐ’ கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தெரு நாய்கள்.’
இந்தப் படத்தில் நாயகனாக பிரதீக்கும், நாயகியாக அக்க்ஷதாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் அப்புக்குட்டி, இமான் அண்ணாச்சி, ராம்ஸ், பவல், ஆறுபாலா, மைம் கோபி, சாய் தீனா, மதுசூதனன், கூல் சுரேஷ், நிலானி, சரண்யா, நிலா, சம்பத்ராம், கஜராஜ் , வழக்கு எண் முத்துராமன், பிர்லா போஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – தளபதி இரத்தினம், இசை – ஹரீஷ், சதீஷ், படத் தொகுப்பு – மீனாட்சி சுந்தர், சண்டை பயிற்சி – பில்லா ஜெகன், பாடல்கள் – முத்தமிழ், லலிதானந்த், GKB, மாஷா சகோதரிகள், பாடியவர்கள் – வைக்கம் விஜயலட்சுமி, மகாலிங்கம். இணை தயாரிப்பு – உஷா, தயாரிப்பு – சுசில்குமார், எழுத்து, இயக்கம் – ஹரி உத்ரா.
“இத்திரைப்படம் டெல்டா விவசாயக் கிராமங்களில் எரிவாயு குழாய் பதிப்பை எதிர்க்கும் விவசாயிகளின் பிரச்சனையைப் பேசும் படமாக உருவாகியுள்ளது. விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு. எனவே அதனைக் காக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ எனும் வள்ளலாரின் கருத்தை ‘தெரு நாய்கள்’ திரைப்படம் பேசுகிறது” என்கிறார் இயக்குநர் ஹரி உத்ரா.
“இது போன்ற சமூகம் சார்ந்த நல்ல கருத்துகளை ஒவ்வொருவரும் தங்கள் திரைப்படத்தின் வாயிலாக மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது சினிமாவின் வளர்ச்சிக்கு நல்லது..” என்று படத்தைப் பார்த்தத் தணிக்கை குழுவினர் பாராட்டியுள்ளனர்.
மேலும், இத்திரைப்படத்தைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் பார்க்கும்விதமாக ‘U’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் படக் குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தற்போது ‘தெரு நாய்கள்’ படத்தின் இறுதிக் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனவாம். விரைவில் இசை வெளியீடும், ஜூலை மாதத்தில் பட வெளீயீடும் நடக்கும் என்று தயாரிப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.