போட்டியும், காதலும் கலந்த படம் ‘பண்டிகை’

போட்டியும், காதலும் கலந்த படம் ‘பண்டிகை’

இளைஞர்கள் இடையே பொழுதுபோக்காக துவங்கி, பந்தய போட்டியாக தொடரும் சண்டை போட்டிகள்  பற்றிய வித்தியாசமான திரில்லர் மற்றும்  காதல் கலந்த  படம்தான் இந்த ‘பண்டிகை’ திரைப்படம்.

சட்டத்துக்கு விரோதமாக நடக்கும் சண்டை போட்டிகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் கிருஷ்ணா மற்றும் அனந்தி நடித்துள்ளனர். ‘டீ டைம் டாக்கீஸ்’ தயாரித்து  ‘ஆரா சினிமாஸ்’ வெளியிட உள்ள இப்படத்தை இயக்குநர் பெரோஸ் இயக்கியுள்ளார்.

CD5A0473

“சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சட்ட விரோத சண்டை போட்டிக்கு தள்ளப்பட்ட ஓர் கோபக்கார இளைஞனின் காதல்தான் ‘பண்டிகை’. காதலிலும்  ஆக்ஷனிலும்  சரியான அளவில் பயணிக்கும் படம் இது.

படத்தை பார்த்து எங்கள் குழுவினருக்கு பெரும் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற்பட்டது. நல்ல படங்களை வெளியிட்டு வெற்றிகளை குவித்துக் கொண்டிருக்கும் ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் எங்கள் படத்தை வெளியிட முன் வந்ததினால் படத்தின் தரமும் ஊர்ஜிதமானது.

சுருக்கமாக கூற வேண்டுமென்றால் ‘பண்டிகை’ மக்கள் திரையரங்குகளுக்கு வந்து கொண்டாட்டத்துடன்  ரசிக்க வேண்டிய படம்…” என கூறினார் இயக்குநர் பெரோஸ். 

Our Score