full screen background image

சரவணன் என்கிற சூர்யா திரைப்படத்துக்கு வினோதமான தடை..! ஆச்சரியத்தில் சினிமாவுலகம்..!

சரவணன் என்கிற சூர்யா திரைப்படத்துக்கு வினோதமான தடை..! ஆச்சரியத்தில் சினிமாவுலகம்..!

‘சரவணன் என்கிற சூர்யா’ திரைப்படம் தயாரித்து முடிக்கப்பட்டு ரிலீஸுக்குத் தயார் நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கங்களில் ஒன்றான கில்டு என்னும் அமைப்பு இந்தப் பெயர் நடிகர் சூர்யாவை குறிப்பதால், அவரிடமும், அவரது தந்தை நடிகர் சிவக்குமாரிடமும் நோ அப்ஜெக்சன் சர்டிபிகேட் வாங்கி வந்தால்தான் படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்று தடை விதித்திருக்கிறார்கள்.

இத்தனையாண்டுகால தமிழ்ச் சினிமாவில் இது மாதிரியான ஒரு நிலைமை இதற்கு முன் வந்ததில்லை.. படத் தயாரிப்பின் துவக்கத்திலேயே தலைப்பை மாற்றும்படிதான் கூறியிருக்கிறார்கள். ஆனால் இப்போது படம் ரிலீஸுக்குத் தயாரான நிலையில் இதற்கு சினிமாவுலகில் இருக்கும் கில்டு அமைப்பே முட்டுக் கட்டை போட்டிருக்கிறது திரையுலகத்தினருக்கு அதிர்ச்சி பிளஸ், ஆச்சரியத்தையும் அளித்திருக்கிறது.

கில்டு அமைப்பின் இந்தச் செயலுக்கு நடிகர் சூர்யா மற்றும் அவரது தந்தையான நடிகர் சிவக்குமாருக்கு சம்மதமா என்பது இதுவரையிலும் தெரியவில்லை.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் முருகராஜா, இது குறித்து தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை இதுதான்..!

சரவணன் என்கிற சூர்யா திரைப்படத்தின் தலைப்பு குறித்து, உங்களிடம் சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இத்திரைப்படம், சூர்யா அவர்களின் மதிப்பை எந்த விதத்திலும் தாழ்த்தாது.  நானும் ஒரு பொறுப்புள்ள இடத்தில்தான் அமா;ந்துள்ளேன்.  ஆகையால் எந்த விதத்திலும் எவரையும் காயப்படுத்தாத தரமான திரைப்படத்தை மக்களுக்கு தர வேண்டிய பொறுப்பை நான் பெரிதும் உணர்ந்துள்ளேன்.

இந்தப் படம்  ஒரு கற்பனா சக்தி. இத்தலைப்பின் அடிப்படையில்தான் முழுக் கதையும் அடங்கியுள்ளது.  இப்படத்தின் கதை, வசனம், திரைக்கதை, பாடல் மற்றும் பல பரிமாணங்களுக்காக, நான் பல மாதங்களாக என் தூக்கத்தை தொலைத்து கடின உழைப்பை கொடுத்துள்ளேன்.

 படப்பிடிப்பு முடிந்து, வெளியிட தயாராக உள்ள நிலையில்  நேற்று, நான் உறுப்பினராக உள்ள FILM & TELEVISION PRODUCERS GUILD OF SOUTH INDIA-விடம் சென்று Publicity Clearance Certificate  கேட்டேன். ஆனால் அவர்களோ ‘நடிகர் சூர்யா மற்றும் சிவகுமார் அவர்கள் இந்தப் படத்துக்கு ஓகே கூறினால்தான்  Publicity Clearance Certificate  தர முடியும்’ என்று கூறிவிட்டனர். இதனால் இப்போது நான்  பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.

தலைப்பை மாற்றுவது, படத்தின் அடித்தளத்தையே உடைப்பது போல் ஆகும். பல தடைகளை மீறி, நான் இத்திரைப்படத்தை முடித்துள்ளேன்.  என் நிலங்களையும், பெற்றோர் மற்றும் சகோதரியின் நகைகளையும் விற்றும்தான் இத்திரைப்படத்தை முடித்துள்ளேன்.

பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நான், தலைப்பை மாற்றுவதால் படத்தின் நிறைய காட்சிகளை மறு படப்பிடிப்பு மற்றும் அது தொடர்பான இதர வேலைகளையும் செய்ய என்னிடம் இப்போது போதிய பொருளாதாரம் இல்லை. ஏற்கெனவே படத்தின் விளம்பரத்திற்காக நிறைய பணம் சிலவு செய்துள்ளேன்.

பண முதலீடு மட்டுமல்லாது, ஒரு இயக்குநராகவும், ஒரு தயாரிப்பளராகவும் ஒரு நடிகனாகவும், நான் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாது.  இவற்றுக்கெல்லாம் ஓரே தீர்வு இத்திரைப்படத்தின் மூலம் எனக்கு கிடைக்கப் போகும் வெற்றிக் கனிதான். நான் சினிமாவை காதலிக்கிறேன்.  சினிமாத்  துறையில் நானும் ஒரு கிளையாக இருக்க ஆசைப்படுகிறேன்.  தற்பொழுது, சினிமாவில் சூர்யா அவர்கள் வகிக்கும் இடத்தை ஒப்பிடும்போது, நான் வெறும் பூஜ்ஜியம்தான். சூர்யா அவர்களின் ஆசீர்வாதமும், வழிகாட்டுதலும்தான் எங்களை போன்ற இளைஞர்களை ஊக்குவிக்கும். மேலும் இத்தலைப்பை நான் முறைப்படி பதிவு செய்து உத்தரவும் பெற்றுள்ளேன்.

நான் என்ன தவறு செய்தேன். இதற்கு முன்னாள் நிறைய திரைப்படங்களின் பெயர்கள் பிரபலமானவர்களின் பெயர்களைக் கொண்டு வந்துள்ளது. பிரபலமான ஊர்களின் பெயர்களைக் கொண்டும் வந்து உள்ளது.

1.  இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (2013) – பாலகுமாரன் ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர்.

2.  பாலா(2002), நான்தான் பாலா (Under Production for release starring Vivek) பாலா ஒரு குறிப்பிடத் தகுந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர்.

3.  அம்பாசமுத்திரம் அம்பானி – Dhirubai Ambani – World Renowned Industrialist

4.  Ghajini (கஜினி) – Surya Sir’s Box Office Hit – Prominent Turkic ruler of the Ghaznavid Empire.

5.  RAMAKRISHNA – – RAMAKRISHNA was a famous sage of 19th century India.

6.  Bombay – India’s Financial Capital

7. ‘சகுனி’, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ போன்ற பல படங்களில் பிரபலமானவர்களின் பெயர்களில் நிறைய காமெடி வசனங்கள் இடம் பெற்றுள்ளன. இதையெல்லாம் மக்கள் பக்குவமாக எடுத்து கொண்டுள்ளனர்.

சினிமா என்பது ஒரு கிரியேட்டிவிட்டி. இங்கே இதை செய்யாதே அதை செய்யாதே.. இந்த்த் தலைப்பை வைக்காதே… அந்த்த் தலைப்பை வைக்காதே என்றால் யாரும் எதுவும் செய்ய முடியாது. பாடல் எழுத முடியாது. வசனமும் எழுத முடியாது. சினிமா தொழிலே செய்ய முடியாது. We need Freedom of Space to show our creative talents. I have travelled in a mood spending my time, money, energy and everything towards this project. So I cannot change the title. Also no one has got copyright over their name.

படப்பிடிப்பு நடக்கவில்லை என்றால்கூட தலைப்பை மாற்றி விடுவேன். அனைத்து  வேலைகளும் முடிந்த பின் தலைப்பை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. படத்தின் தலைப்பை மாற்றினால் கதைக்களம் சிதைந்து போகும். என் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இந்தப் படத்தில் அர்ப்பணித்துள்ளேன். இப்படத்தின் வெளியீடு மற்றும் பிற வழிகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ யாராலும் இடையூறுகள் வந்தால் சாவதை தவிர எனக்கு வேறு வழி இல்லை. ஒரு படைப்பாளியின் வலியும், வேதனையும்  இன்னொரு படைப்பாளிக்குத்தான் தெரியும். இந்த சூழ்நிலையில் ஒரு தயாரிப்பாளரின் தவிப்பை என்னவென்று சொல்வது. வார்த்தைகள் இல்லை.

தங்களைப் பற்றிய சொந்த விஷயங்கள் திரைப்படத்தில் இல்லாத நிலையில் இவ்வளவு பெரிய எதிர்ப்புத் தேவையற்றது. எங்களைப் போன்று சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு சூர்யா அவர்கள் ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டுகின்றோம்.  எங்களது கற்பனா சக்தியை முடக்கி விடாதீர்கள்.  இத்திரைப்படத்தில் சூர்யா அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையையோ, பொது வாழ்க்கையையோ விமர்சிக்கும் வகையிலோ அல்லது குறை சொல்லும்; வகையிலோ அல்லது தொடர்புபடுத்தும் வகையிலோ எவ்வித காட்சியமைப்பும், வசனங்களும் இடம்பெறவில்லை என்பதை, நாங்கள் சினிமா தொழிலின் மீது கொண்ட பற்றுதல் மேல் ஆணையாக உறுதியளிக்கின்றோம். 

இத்திரைப்படத்தில் வரும் கதாநாயகன் ஒரு தீவிர கலை ரசிகன்.  அதற்கு மேற்பட்டு நடிகா சூர்யாவிற்கும், இக்கதைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. வேண்டுமானால் நடிகர் சூர்யா அவர்கள் திரைப்படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

எனவே தாங்கள் எங்களது உண்மையான உழைப்பையும், முயற்சியையும் புரிந்து கொண்டு சூர்யா போன்று அனுபவமிக்க கலைஞர்கள் மற்றும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், பத்திரிக்கை நண்பர்கள், இணையத் தளங்கள் மற்றும் அனைத்து ஊடகங்களும் எங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுமாறு மிக தாழ்மையுடன் கண்ணீர் மல்க வேண்டுகின்றோம்.  இத்திரைப்படத்தை முழுமையாக ரசிகர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் பல நூறு தொழிலாளர்களின் உழைப்பும் அடங்கியுள்ளது.

கில்டு அமைப்பின் பதில், பெப்சியின் பதில், நடிகர் சூர்யாவின் பதிலெல்லாம் நாளைக்கு வருமென்று நம்புகிறோம்..!

Our Score