full screen background image

சித்தாராவின் மகனாக யோகிபாபு நடிக்கும் ‘சன்னிதானம் பி.ஓ.’ திரைப்படம்

சித்தாராவின் மகனாக யோகிபாபு நடிக்கும் ‘சன்னிதானம் பி.ஓ.’ திரைப்படம்

சர்வதா சினி காரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் மது ராவ் மற்றும் ஷபீர் பதான் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘சன்னிதானம் பி.ஓ’.

இந்தப் படத்தில் யோகிபாபு, சித்தாரா, பிரமோத் ஷெட்டி, வர்ஷா விஸ்வநாத், மேனகா சுரேஷ், மூணார் ரமேஷ், வினோத் சாகர் மற்றும் அஸ்வின் ஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர்.

கதை மற்றும் திரைக்கதையை அஜினு ஐயப்பன் எழுத, இயக்குநர் அமுதா சாரதி வசனங்களை எழுதியுள்ளார். ஒளிப்பதிவை வினோத் பாரதி.ஏ, படத்தொகுப்பை பொன் கதிரேஷ், உடைகள் வடிவமைப்பை நடராஜ், ஒப்பனையை ஷிபுகுமார், கலையை விஜய் தென்னரசு, சண்டை பயிற்சியை மிரட்டல் சிவா மற்றும் பத்திரிக்கை தொடர்பை நிகில் முருகன் கவனிக்கின்றனர்.

சபரிமலையின் பின்னணியில் குடும்ப உணர்வுகளும், நகைச்சுவையும் சரி விகிதத்தில் கலந்து இத்திரைப்படம் உருவாகவுள்ளது. 

தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே சமயத்தில் இத்திரைப்படம் உருவாகிறது.

இத்திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் அமுதா சாரதி, “சிறு வயதில் தொலைந்த தனது மகனை தேடும் ஒரு தாயின் கதையை குடும்ப உணர்வுகளும், நகைச்சுவையும் சரிவிகிதத்தில் கலந்து இந்த ‘சன்னிதானம் பி.ஓ’ திரைப்படம் சொல்லும். தாயாக சித்தாராவும், மகனாக யோகிபாபுவும் நடிக்கின்றனர். மற்றொரு முதன்மை கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் பிரமோத் ஷெட்டி நடிக்கிறார்.

சபரிமலை பின்னணியில் நடக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் விரைவில் தொடங்க உள்ளது. பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும். உணர்வுப்பூர்வமான ஒரு கதையை, நகைச்சுவை ததும்ப பார்வையாளர்களுக்கு இத்திரைப்படம் வழங்கும்…” என்றார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Our Score