full screen background image

தினேஷ் மாஸ்டர் நடிக்கும் ‘கரும்புள்ளி கிராமம்’ திரைப்படம்!

தினேஷ் மாஸ்டர் நடிக்கும் ‘கரும்புள்ளி கிராமம்’ திரைப்படம்!

வி.எஸ்.ஃபிலிம் மேக்கர் மற்றும் அனகா பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். ஜெயபாலா மற்றும் ஜி.சுகன்யா இருவரும் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘கரும்புள்ளி கிராமம்’. 

இந்தப் படத்தில் மாஸ்டர் தினேஷ், யோகி பாபு, ஸ்வேதா டோரத்தி, வாழை ஜானகி, பழ கருப்பையா, சுப்பிரமணிய சிவா, கவிதா ரவி, ஜெய் பீம் மொசக்குட்டி, முப்பூசாமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

“சமூக சிந்தனைகளுடன் சமூகத்தில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த படம் உருவாகி உள்ளது படம் வெளியாகும் போது நிச்சயமாக இந்த படத்தின் மூலமாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும்” என்று இயக்குநர் ராசா ஆனந்த் நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மிக விரைவில் இந்தக் ‘கரும்புள்ளி கிராமம்’ திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Our Score