full screen background image

ஸ்ரீகாந்த், நட்டி நட்ராஜ் நடிக்கும் புதிய திரைப்படம் ‘சம்பவம்’

ஸ்ரீகாந்த், நட்டி நட்ராஜ் நடிக்கும் புதிய திரைப்படம் ‘சம்பவம்’

மைனா’, ‘சாட்டை’, ‘மொசக்குட்டி’, ‘சௌகார்பேட்டை’, ‘பொட்டு’, ‘கா’ ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் புதிய படமொன்றை தயாரிக்கிறார்.

சம்பவம்’ என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த், நட்டி நட்ராஜ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்க, நாயகிகளாக பூர்ணா, ஸ்வேதா அவஸ்தி நடிக்கின்றனர். நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தரா டிராவல்ஸ்’ படத்தின் நாயகியான ராதாவும் நடிக்கிறார்.

படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே நடிக்கிறார். மேலும் இயக்குநர் ஏ.வெங்கடேஷ், ஜெயபிரகாஷ், கே.ராஜன், மகேந்திரகுமார் நாகர், சிங்கம்புலி, நாஞ்சில் சம்பத், விஜய் டிவி’ முல்லை மற்றும் பல நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – இனியன் ஜே.ஹாரிஸ், இசை – அம்ரீஷ், படத் தொகுப்பு – சந்திரகுமார், பாடல்கள் – கவிஞர் முருகானந்தம், கலை இயக்கம் – ஏ.பழனிவேல், சண்டை பயிற்சி இயக்குநர் – ராஜசேகர், தயாரிப்பு மேற்பார்வை – சங்கர், நிர்வாக தயாரிப்பு – ஜோஸ், வரைகலை – தினேஷ் அசோக், பத்திரிகை தொடர்பு – புவன்.

இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் பா.ரஞ்சித்குமார், இவர் இயக்குநர் ஏ.வெங்கடேஷிடம் இணை இயக்குனராக பணிபுரிந்தவர்.

உயிருக்குப் போராடும் தனது மகளை காப்பாற்ற துடிக்கும் ஒரு தந்தையும், இந்த சமூகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சாதாரண மனிதனும் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும்போது நடைபெறும் சம்பவமே கதையின் மையக் கரு.

இந்தப் படத்தின் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர், இயக்குநர், நட்டி நட்ராஜ், ஸ்ரீகாந்த், மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Our Score