full screen background image

குடிகாரர்களின் வாழ்க்கையை நகைச்சுவையாகச் சொல்லும் ‘லோக்கல் சரக்கு’ படம்

குடிகாரர்களின் வாழ்க்கையை நகைச்சுவையாகச் சொல்லும் ‘லோக்கல் சரக்கு’ படம்

டிஸ்கவர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ்.வலண்டினா சுவாமிநாதன், டாக்டர்.பத்மா வெங்கடசுப்ரமணியன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் புதிய படம் ‘லோக்கல் சரக்கு’.

ஒரு குப்பைக் கதை’, ‘நாயே பேயே’ ஆகிய படங்களை தொடர்ந்து பிரபல நடன இயக்குநர் தினேஷ் இந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். யோகி பாபுவும் படத்தில் ஒரு முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

உபாசனா நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் இமான் அண்ணாச்சி, சாம்ஸ், ரெமோ சிவா, சிங்கம் புலி, வையாபுரி, சென்றாயன், வினோதினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு எம்.மூவேந்தர் மற்றும் கே.எஸ்.பழநி ஒளிப்பதிவு செய்கின்றனர். ஜே.எப்.கேஸ்ட்ரோ படத் தொகுப்பு செய்ய, முஜ்பூர் ரகுமான் கலையை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார்.

குடிப் பழக்கத்துக்கு அடிமையானவர்களால் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள்தான் படத்தின் மையக் கரு. அத்தகைய பிரச்சனைகளையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் காமெடி கலந்து கமர்ஷியலாக சொல்வதுதான் இந்த ‘லோக்கல் சரக்கு’ படத்தின் கதை.

“தினேஷ் மற்றும் யோகி பாபு ஆகியோரது கூட்டணியின் காமெடிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடியாக இருப்பதோடு சமூகத்திற்கான நல்ல மெசஜையும் கொடுக்கும் கமர்ஷியல் திரைப்படமாகவும் இருக்கும்” என்கிறார் இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார்.

அழகர் மலை’, ‘சுறா’, ‘பட்டைய கிளப்புவோம் பாண்டியா’ உள்ளிட பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் காமெடி காட்சிகள் உருவாக்கத்தில் தலைசிறந்தவர் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

அதிலும் இந்த ‘லோக்கல் சரக்கு’ படத்தில் மதுப் பழக்கத்தை வைத்து அவர் உருவாக்கியிருக்கும் காமெடி காட்சிகள் வயிறு வலிக்க சிரிக்க வைப்பதோடு, சிந்திக்க வைக்கும் விதத்திலும் இருக்கிறது என்கிறது படக் குழு.

வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷின் இசையில் இரண்டு குத்து பாடல்கள் மற்றும் இரண்டு மெலோடி பாடல்கள் இடம் பெற்றுள்ளது. இரண்டு பாடல்களும் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்கும் சூப்பர் ஹிட் பாடல்களாக வந்திருப்பதோடு, டிரெண்ட் செட்டிங் பாடல்களாகவும் இருக்கும் என்று படக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து தற்போது பின்னணி வேலைகள் தொடங்கியுள்ளது.

Our Score