ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் கீர்த்தி சுரேஷின் ‘சகி’ டீஸர்  

ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் கீர்த்தி சுரேஷின் ‘சகி’ டீஸர்  

வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுதீர் சந்திர பதிரி தயாரித்துள்ள திரைப்படம் ‘குட்லக் சகி’.

இந்தப் படத்தில்  கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விளையாட்டு, காதல், நகைச்சுவைப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதி பினிஷெட்டி மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் துப்பாக்கிச் சுடும் வீராங்கனையாக நடிக்கிறார்.

ஒளிப்பதிவு - சிரந்தன் தாஸ்,  இசை - தேவி ஸ்ரீபிரசாத், இணை தயாரிப்பு - ஷ்ராவ்யா வர்மா,  தயாரிப்பு நிறுவனம் - வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ், தயாரிப்பு - சுதீர் சந்திரா பதிரி, எழுத்து, இயக்கம் - நாகேஷ் குக்குனூர், வெளியீடு - தில் ராஜூ (ஸ்ரீவெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ்)

இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

பெண்களை மையப்படுத்திய திரைப்படத்தில் இணை தயாரிப்பாளர் ஷ்ராவ்யா வர்மா வழி நடத்த, முழுக்க பெண்கள் நிறைந்த குழு என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதம் இருக்க, படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்டன. இறுதிகட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. 

இந்தப் படத்தின் டீஸர் நாளை ஆகஸ்ட் 15-ம் தேதி காலை பத்து மணிக்கு சுதந்திர தின விசேஷ வெளியீடாக வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். உற்சாகமாக நடனமாடும் கிராமத்துப் பெண்ணாக கீர்த்தி சுரேஷ் போஸ்டரில் தோற்றமளிக்கிறார். 

பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வழங்கும் இந்தத் திரைப்படத்தை வெளியிடுகிறார்.