80-20 பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் திருநாவுக்கரசுவின் தயாரிப்பில், இயக்குநர் ஜா.ரகுபதியின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஒன்பது குழி சம்பத்’.
அறிமுக நாயகன் பாலாஜி, அறிமுக நாயகி நிகிலா விமல், அப்புக்குட்டி ஆகியோர் இந்தப் படத்தில் முதன்மைப் பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நிகிலா விமலிற்கு தமிழில் முதல் படம் இதுவே. இந்தப் படம் வெளியாக தாமதம் ஆனதால் அவர் நடித்த பல்வேறு படங்கள் தமிழில் வெளிவந்துவிட்டன.
கொளஞ்சி நாதனின் ஒளிப்பதிவு செய்ய, மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பாடல்களை எழுத, சார்லி இசையமைக்க ஆர்.கே.செல்வமணியிடம் இணை இயக்குநராக இருந்த ஜா.ரகுபதி இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.
கிராமத்தில் கோலி விளையாடியபடி திரிந்து கொண்டிருக்கும் போக்கிரி இளைஞனின் வாழ்வில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள். அதனால் அவன் வாழ்வு எப்படி திசை மாறிப் போகிறது என்பதுதான் இப்படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் படம் இது.
5 ஆண்டுகளுக்கு முன்பேயே உருவான இத்திரைப்படம் இப்போதுதான் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி www.regaltalkies என்னும் ஆன்லைன் தியேட்டரில் வெளியாக இருக்கிறது.
ஆன்லைன் தியேட்டரில் வெளியாகும் முதல் தமிழ்த் திரைப்படம் இந்த ‘ஒன்பது குழி சம்பத்’ படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் குறைந்த கட்டணத்தில் படத்தை ஆன்லைனில், மிகத் தெளிவாக, எவ்வித இரைச்சலுமின்றி, தடங்கலுமின்றி வெளியாவதால், ரசிகர்கள் கட்டணம் செலுத்தி படத்தைப் பார்ப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறார்கள் படக் குழுவினர்.
அதே நேரம் தவறான முறையில் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி படத்தை டவுன்லோடு செய்து வேறு தளங்களில் வெளியிட்டாலோ அல்லது வேறு வழிகளில் படத்தை வெளியிட்டாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று படத்தின் தயாரிப்பாளரான திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்றைக்கு ஒரு அறிக்கையை தயாரிப்பாளர் திருநாவுக்கரசு வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கை இதோ :