‘பிரேமம்’ மலையாளப் படத்தில் ‘மலர் டீச்சராக’ நடித்துப் பெரும் புகழ் பெற்ற நடிகை சாய் பல்லவி தற்போது மிக செலக்ட்டிவ்வான படங்களில் நடித்து வருகிறார்.
இருந்தும் இரண்டு சர்வதேச சாதனைகளுக்குச் சொந்தக்காரராக மாறியிருக்கிறார் சாய் பல்லவி.
சாய் பல்லவியின் நடிப்புத் திறமையுடன், அவரது நடனத் திறமையும் சேர்ந்து அவரை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
ஏற்கெனவே தனுஷூடன் அவர் நடித்திருந்த ‘மாரி-2’ படத்தில் இடம் பெற்றிருந்த ‘ரவுடி பேபி’ பாடலின் வீடியோ பதிவு 100 கோடி பார்வைகளைக் கடந்து உலக சாதனை படைத்தது.
இப்போது அதே போன்ற இன்னொரு சாதனையையும் சாய் பல்லவி படைத்துள்ளார்.
தெலுங்கின் பிரபலமான இயக்குநரான சேகர் கம்முலா தற்போது ‘லவ் ஸ்டோரி’ என்ற படத்தினை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சாய் பல்லவியும், நாக சைதன்யாவும் ஜோடியாக நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ‘சாரங்கதாரியா’ என்ற பாடலின் வரிகள் அடங்கிய வீடியோ காட்சி சமீபத்தில் வெளியானது. இந்த வீடியோவும் தற்போது 10 கோடி பார்வைகளைத் தாண்டியுள்ளது.
இந்திய அளவில் இந்தச் சாதனையைச் செய்திருக்கும் முதல் நடிகை சாய் பல்லவிதான். இந்த இரண்டு சாதனைகளிலும் இடம் பிடித்திருக்கும் முதல் நடிகையே இவர்தான் என்பதால் எல்லாப் புகழும் சாய் பல்லவிக்கே என்கிறார்கள் தெலுங்கு திரையுலகத்தினர்.