தற்போதைய காலக்கட்டத்தின் அப்பா-மகன் உறவு பற்றிச் சொல்லும் ‘அனுக்கிரகன்’

தற்போதைய காலக்கட்டத்தின் அப்பா-மகன் உறவு பற்றிச் சொல்லும் ‘அனுக்கிரகன்’

சக்தி சினி புரொடக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிப்பாளர்கள் டாக்டர். முருகானந்தம் மற்றும் சண்முகப்பிரியா இருவரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘அனுக்கிரகன்’.

இப்படத்தில் கதாநாயகன், நாயகி போன்ற வழக்கமான சூத்திரங்களில் நடிகர்கள் இருக்க மாட்டார்கள். கதைக்கேற்ற நாயகர்களாகத்தான் இருப்பார்கள். அப்படி ஒரு கதாபாத்திரத்தில்தான் முரளி ராதாகிருஷ்ணன் நடித்துள்ளார். இவர் ஜீ’ தமிழ் தொடர்கள் வழியே புகழ் பெற்றவர்.

நடிகர் அஜய் கிருஷ்ணா இன்னொரு பிரதான வேடத்தில் நடித்திருக்கிறார். ‘நாடோடிகள்’ படம் முதல் ஒரு திருப்பு முனையான வாய்ப்புக்காக காத்திருப்பவர் இவர்.  நடிகை ஸ்ருதி ராமகிருஷ்ணாவும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சில கன்னட, தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். 

இன்னொரு முகம் தீபா. தமிழ், தெலுங்கில் நடித்திருக்கும் இளம் நடிகை இவர்.  ‘ரெக்க’ படத்தில் ‘கண்ணம்மா கண்ணம்மா’ பாடலில் வருபவரும் ‘மாரி ‘படத்தில் தனுஷின் மகனாக நடித்தவருமான ராகவனும் இதில் நடித்துள்ளார். மேலும் பல அனுபவமுள்ள நடிகர், நடிகையரும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள் .

ஒளிப்பதிவு – வினோத் காந்தி, இசை – ரெஹான், படத் தொகுப்பு – S.K.சதீஷ் குமார், நடன இயக்கம் – ரமேஷ் கமல், மக்கள் தொடர்பு – சக்தி சரவணன், எழுத்து, இயக்கம் – சுந்தர் கிரிஷ்.

அறிமுக இயக்குநரான சுந்தர் கிரிஷ் மிராஜ் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் இயக்கம், திரைக்கதை எழுதுதல், ஸ்டோரி போர்டு உருவாக்குதல் போன்றவற்றைக் கற்றிருக்கிறார். திரைப்படப் படப்பிடிப்புகளுக்குச் சென்று நடைமுறை அனுபவத்தையும் உற்று நோக்கி கற்றுக் கொண்டிருக்கிறார். பல பயிற்சிப் பட்டறைகளில் கலந்து கொண்டு திரைக் கலையைக் கற்றிருக்கிறார்.

‘அனுக்கிரகன்’ என்றால் ‘அருள்’ அல்லது ‘ஆசீர்வாதம்’ எனப் பொருள் உண்டு. இறைவனின் ஆசீர்வாதமாகவே மாறிய ஒரு மகனைப் பற்றிய கதைதான் இது.

நடுத்தர வயதுள்ள அனைவரையும் தனது பால்ய காலத்துக்குத்  திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு கதையாக இப்படம் உருவாகி இருக்கிறது.

புதுமையான திரைக்கதையில் ஹாலிவுட் தரத்தில் இந்த ‘அனுக்கிரகன்’ உருவாகியுள்ளது.

விரைவில் திரைக்கு வரவிருக்கிறான் இந்த ‘அனுக்கிரகன்’.

Our Score