நடிகர் சத்யராஜ் முதன்முதலாக கதாநாயகனாக நடித்து 1985-ல் வெளிவந்த ‘சாவி’ என்ற படத்தின் தலைப்பில், 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு திரைப்படம் உருவாகிறது.
இதில் பிரகாஷ் சந்திரா ஹீரோவாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே இயக்குநர் இராசு.மதுரவனின் ‘கோரிப்பாளையம்’, ‘முத்துக்கு முத்தாக’ ஆகிய படங்களில் நடித்தவர். சுனு லட்சுமி ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் ராஜலிங்கம், உதயபானு மகேஷ்வரன், கவிஞர் நந்தலாலா, ஸ்டில்ஸ் குமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – சேகர் ராம், இசை- சதீஷ் தாயன்பன், படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், கலை இயக்கம் – வீரசமர், சண்டை பயிற்சி – சுப்ரீம் சுந்தர், நடனம் – விஜி சதீஷ், அபிநயஸ்ரீ, டிசைனர் – ச்சி அண்ட் ச்சி, பி.ஆர்.ஓ. – நிகில் முருகன், தயாரிப்பு நிர்வாகம் – எம்.சிவக்குமார்.
இயக்குநர் பிரபு சாலமனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஆர்.சுப்ரமணியம் இந்தப் படத்தை இயக்குகிறார். தி ஸ்பார்க்லேண்ட் நிறுவனத்தின் சார்பில் படத்தை இவரே தயாரித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினசரி செய்தித்தாள்களில் வருகிற நிகழ்வுகளை கோர்த்து ஒரு கதையாக்கி அதற்கு விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்து யதார்த்தமாக ஒரு வாழ்வியலை பதிவு செய்திருப்பதாகச் சொல்கிறார் இயக்குநர் ஆர்.சுப்ரமணியம்.