full screen background image

இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – அக்டோபர் 21, 2015

இன்றைய ரிலீஸ் திரைப்படங்கள் – அக்டோபர் 21, 2015

இன்று 2015 அக்டோபர் 21 புதன்கிழமையானாலும், ஆயுத பூஜையை தொடர்ந்து பூஜை விடுமுறை தினங்களையொட்டி 3 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

10 எண்றதுக்குள்ள

10 endrathukkulla-poster-1

பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் இது. இதில் விக்ரம், சமந்தா, ராகுல்தேவ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்திருக்கிறார். டி.இமான் இசையமைத்திருக்கிறார். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்து படத்தினை இயக்கியிருக்கிறார்.

நானும் ரெளடிதான்

naanum rowdythaan-poster-4

நடிகர் தனுஷ் தனது வொண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்திருக்கும் படம் இது. இதில் விஜய் சேதுபதி, பார்த்திபன், மன்சூரலிகான், நயன்தாரா ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவு – ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், எடிட்டிங் – ஸ்ரீகர் பிரசாத், சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், நடனம் – பிருந்தா, சதீஷ், இசை – அனிருத் ரவிச்சந்தர், பாடல்கள் – தாமரை, விக்னேஷ் சிவன், எழுத்து – இயக்கம் – விக்னேஷ் சிவன்.

குபேர ராசி

I & B மூவிஸ் சார்பாக மது, ஜெய்ஸ்மோன் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இதில் ரோஷன், அபிராமி, தலைவாசல் விஜய், ஸ்ரீரஞ்சனி, பிஜோ, மனோஜ், பாலாம்பிகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

gubera raasi-poster-1

ஒளிப்பதிவு – தில்ராஜ், இசை – கணேஷ் ராகவேந்திரா, நடனம் – ஸ்ரீதர், சண்டை பயிற்சி பயர் கார்த்திக், எழுத்து, இயக்கம் – ஆர்.ராதாகிருஷ்ணன்.

 

Our Score